Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 07-04-2018 | Get More Tamil & English Current Affairs

 Tamil Current Affairs 08-04-2018 

 
உலக செய்திகள்

2018ம் ஆண்டின் “போஆவ் ஆசிய மன்றம் மாநாடு” சீன ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் ஏப்ரல் 8 முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

#  தெற்காசியாவில் உள்ள கம்போடியா நாட்டில் அடுத்த தமிழ் மாநாடு நடத்தவுள்ளதாக உலக தமிழ் வம்சாவழி அமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

#  சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

தேசிய செய்திகள்

#  சென்னை திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஏப்ரல் 12ம் தேதி ஒருநாள் பயணமாக சென்னை வர உள்ளார்.

#  வேளாண்துறை திட்டங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்பு துறைகளில் இணைந்து செயல்பட இந்தியாவும் நேபாளமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

#  இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் நேற்று சந்தித்துள்ளார்.

#  நாட்டிலேயே முதன் முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

விளையாட்டு செய்திகள்

#  கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கமும், ஹூனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

#  கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.

#  கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான பளுதூக்குதலில் 85 கி.கி. பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் 338 கி.கி. எடை தூக்கி தங்கம் வென்றுள்ளார்.

#  கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் ரவிக்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

#  கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதல் 94 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

#  11வது ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியின் ஆட்ட வீரர் ஹார்த்திக் பாண்டயா (பந்து காலில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதால்) விலகவுள்ளார்.

#  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் 43வது முறையாக வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

#  கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான பளுதூக்குதலில் 94 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் வெண்கலம் வென்றுள்ளார்.

#  கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் மேரி கோம் (இந்தியா) 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

#  ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கு பதிலாக (முதுகுவலி காரணமாக) இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

#  ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம் (அமெரிக்கா) ‘அரோரா ஸ்டேஷன்’ என்ற பெயரில் பூமியை சுற்றி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இணையாக விண்வெளி ஓட்டலை உருவாக்கி வருகிறது.

#  சத்தமின்றி பேசுவதை கேட்கச் செய்யும் ‘ஆல்டெர்இகோ’ என்ற ஹெட்செட் கருவியை அர்னவ் கபூர் (அமெரிக்க இந்தியர்) கண்டுபிடித்துள்ளார்.

#  சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளதை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

#  கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.விc-41 ராக்கெட் மூலம் வரும் 12ம் தேதி செலுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

#  சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு ஆட்களை கொண்டு செல்லும் விண்கலத்தை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா உடன்பாடு செய்துள்ளது. (தற்போது ஆட்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கலம் ரஷ்யாவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது)


#  தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் ‘உழவன்’ என்னும் செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள்

#  1,500 கோடி டாலர் மதிப்பில் 110 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.

#  20 பெரிய நகரங்களின் 4ஜி இணைப்பில் பாட்னா முதலிடத்தில் உள்ளதாக “ஓப்பன் சிக்னல் மற்றும் ஒரு வயர்லெஸ் மேப்பிங் நிறுவனம்” தெரிவித்துள்ளது.

#  குருகிராமில் உள்ள இந்தியன் யூனிட் ஆப் தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டேட்டர்ஜி மற்றும் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் உள்ள காம்பட்டீவ்னஸ் மையம் மேற்கொண்ட ஆய்வில் ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#  அமெரிக்காவின் டெலிரக்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தினை எச்சிஎல் மென்பொருள் நிறுவனம் 60 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.

#  4ஜி சிக்னல் நகரங்களில் சென்னை 2வது இடத்தில் உள்ளது.

முக்கிய தினங்கள்

#  ஏப்ரல் 08 – சர்வதேச ரோமானிய தினம்

இறப்பு செய்தி

#  ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் கணவர் நிரஞ்சன் தாமஸ் ஆல்வா உடல்நலக்குறைவால் காலமானார்.
Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top