Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 14-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 14-04-2018


உலக செய்திகள்

->  உலக சுகாதார அமைப்பான யுனிசெப், உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 10 முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

->  மியான்மர் நாட்டில் ஏப்ரல் 17ம் தேதி புத்தாண்டு பிறக்கிறது. இதனை முன்னிட்டு மக்கள் தண்ணீர் திருவிழாவை(ஒருவர் மேல் ஒருவர் தண்ணிரை பீய்ச்சி அடிப்பர்) கொண்டாடினர்.

->  இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தேசிய செய்திகள்

->  பீஜப்பூருக்கு(சத்தீஸ்கர்) இன்று சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘ஆயுஷ்மான் பாரத்-தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஓராண்டுக்கு தலா ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு அளிக்கப்படும்.

->  பீஜப்பூரில், அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அந்நகரில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு தலா ஒரு ஜோடி காலணிகளை வழங்கினார். பின்னர் ‘ஃசைபர் ஆப்டிக்ஸ் கேபிள்’ உதவியுடன் ஏழு மாவட்டங்களுக்கு முதல் கட்ட இணைய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

->  புதுச்சேரி, கவர்னர் அலுவலகமான ராஜ்நிவாஸில் மின்னணு முறையில் பொது மக்களின் குறைகளை கேட்பதற்காக http://rajnivas.py.gov.in என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

->  ரஷ்யா உதவியுடன் இந்தியாவிலேயே தடவாள பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

->  542 மில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே குறைந்த எடை கொண்ட 145 பீரங்கிகளை வாங்குவதற்கு பிரிட்டிஷை சேர்ந்த பிஏஇ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது

விளையாட்டு செய்திகள்

->  காமன்வெல்த் விளையாட்டில் ஈட்டி எறிதலில் 86.47 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

->  காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார்.

->  காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப் பதக்கம் வென்றார்.

->  காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 125 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்.

->  காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினீஷ் போகத் தங்கம் வென்றார்.

->  காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

->  காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா – மௌமா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  பூமியில் வடக்கு தெற்காக ஏற்கெனவே ஒரு காந்தப் புலம் காணப்படுகிறது. இந்த காந்தப் புலத்தினை விட 20000 மடங்கு வலிமை குறைந்த மற்றொரு காந்த புலத்தினை ஈசா எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 14 – அம்பேத்காரின் 127வது பிறந்த நாள்.

வர்த்தக செய்திகள்

->  தமிழகத்தில் நுகர்வோரிடம் பொட்டல பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு குறைந்தாலோ ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

->  இந்திய நிறுவனங்கள் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ரூ.1.20 லட்சம் கோடி மதிப்புக்கு(1,853 கோடி டாலர்) இணைத்தல் மற்றும் கையெகப்படுத்துதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

->  ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

->  இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top