Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 24-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 24-04-2018

Tamil Current Affairs 07-04-2018

உலக செய்திகள்

->  அமெரிக்க உளவு பிரிவு சிஐஏவில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது.

->  உலகின் மிகப் பெரிய விமானத்தை (ஸ்ட்ரேட்டோலான்ச்) பால் ஆலென் (மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியர்) வடிவமைத்துள்ளார்.

->  சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய பிரச்சணைகளுக்கு தீர்வு காண எமானுவேல் மேக்ரான் (பிரான்ஸ்) டொனால்ட் ட்ரம்ப்-ஐ (அமெரிக்கா) சந்தித்துள்ளார்.

->  உலகின் மிகப்பெரிய கொசு வகை ஒன்றினை சீனாவில் உள்ள பூச்சியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

->  அன்னிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடத்திலும், மெக்சிகோ மூன்றாம் இடத்திலும், நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் நைஜீரியாவும், எகிப்தும் உள்ளன.

->  எச்1-பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய செய்திகள்

->  மனித வளர்ச்சி குறியீட்டில் 188 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவிற்கு 131 வது இடம் கிடைத்துள்ளதாக நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.

->  மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு எளிதாக பெற ஏதுவாக வால்ட் போன்ற வசதியை உருவாக்கியுள்ளது.

->  இந்திய விமானப்படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மின்னணு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

->  ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலைகளை அறிவதற்கான ‘ஆப்’ எனப்படும் செயலியை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

->  ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் வகையில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் படத்துடனான தபால் தலையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.

->  மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 225ம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டத்தை வென்றுள்ளார்

->  இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

->  ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

வர்த்தக செய்திகள்

->  இங்கிலாந்து வங்கி தலைவர் பதவிக்கு இங்கிலாந்து இதழ் வெளியிட்ட வாய்ப்புள்ளவர்களுக்கான பட்டியலில் ரகுராம் ராஜன் (இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்) இடம் பெற்றுள்ளார்.

->  2018-19ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதம் அடையும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

->  1991ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் கொள்ளையை மாற்றி புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியடப்போவதாக சுரேஷ் பிரபு (வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

->  இந்தியாவில் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்று ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

->  கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 2018 ஜனவரி-மார்ச் காலாண்டில் 73 சதவிகிதம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.

->  பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.606 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

->  முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனமான, சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு பைனான்ஸ் நான்காம் காலாண்டில் 32 சதவீத லாபம் ஈட்டியுள்ளது.

விருதுகள்

->  ஜெர்மனியில் நடைபெற்ற 12வது சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

->  சென்னையில் நடந்த மருத்துவ உச்சி மாநாட்டில், ஜிப்மர் மருத்துவமனைக்கு சர்வதேச மருத்துவ சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top