Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 09-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 09-04-2018


உலக செய்திகள்

உலகின் மிகப் பெரிய சொகுசுக் கப்பலான ‘சிம்பொனி ஆப் த சீஸ்’ இன்று ஸ்பெனியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது.

 சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ‘பிரித்தம் சிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 2ம் உலக போரின் போது அமெரிக்கா பயன்படுத்திய ‘லேடி லெக்ஸ்’ என்று அழைக்கப்படும் போர்க்கப்பல் ‘யு.எஸ்.எஸ்..லெக்சிங்டன்’ ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஹங்கேரி நாட்டின் புதிய பிரதமராக ‘விக்டர் ஆர்பன்’ 4வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 சார்ஜாவை சேர்ந்த எமிரேட்ஸ்களுக்கு(இன்சூரன்ஸ் செய்பவர்களுக்கு மட்டும்) மாதந்தோறும் 17,500 திர்ஹாமுக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மன்னர் ‘ஷேக் சுல்தான் பின் முகமது அல்’ உத்தரவிட்டுள்ளார்.

 மத்திய ஆப்பிரிக்க நாடான இக்லடோரியல் கினியா மற்றும் இந்தியா இடையே பிரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தேசிய செய்திகள்

 வழக்கறிஞர்கள், ஊழியர்களின் குழந்தைகளுக்காக உச்ச நீதிமன்ற வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய குழந்தைகள் காப்பகம் மே 1ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாடு இன்று டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெறுகிறது. பிரதமர் ‘நரேந்திர மோடி’ சிறப்புரையாற்றுகிறார்.

 இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ‘சர்மா ஒலிக்கு’ உத்தரகாண்ட் மாநில ஜி.பி. பன்ட் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

 மூளைச் சாவு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான புதிய நெறிமுறைகளை நாட்டிலேயே முதன் முறையாக கேரள அரசு வெளியிட்டுள்ளது.

 ஐந்து மாநிலங்களில் ( மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசா ம் ) உள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகளை அகல இரயில் பாதைகளை மாற்றாமல் , அவற்றை பாரம்பரிய வழித்தடமாக பராமரிக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 கோவாவில் செயலி மூலம் டாக்ஸி சேவையை விரிவுபடுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 போர் விமான ஒப்பந்தங்களில் உலகளவில் மிகப் பெரிய ஒப்பந்தத்தை (100 போர் விமானங்கள் வாங்க) இந்தியா மேற்கொள்ள உள்ளது.

விளையாட்டு செய்திகள்

 காமன் வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

 காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ‘ஜித்துராய்’ தங்கப்பதக்கத்தையும், ‘ஓம் மிதர்வால்’ வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

 காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் 105 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ‘பிரதீப் சிங்’ வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ‘அபூர்விசண்டேலா’ வெண்கலப் பதக்கமும், ‘மெகுலி கோஷ்’ வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்துள்ள ‘பார்கர் சோலார் புரோப்’ விண்கலம் ஜுலை 31ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்

 ஏப்ரல் 08 – உலக ரோமானிய தினம்.

வர்த்தக செய்திகள்

 ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவில் அரசு சார்பு உறுப்பினராக ‘லோக் ரஞ்சன்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியுடன் அஞ்சலக சேமிப்புக் கணக்கை இணைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு இணையதள வங்கி சேவை(நெட் பேங்கிங்) மே மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

 நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய அரசு நிறுவனத்துக்கு பாரத் ஸ்டேட் வங்கி ரூ.8000 கோடியை கடனாக வழங்கவுள்ளது.

 இரு சக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 2017ம் ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top