Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 10-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 10-04-2018 


உலக செய்திகள்

சவுதி அரேபியாவில், அந்நாட்டு நிதி நிறுவனமும், ஜப்பானின் சாப்ட் டேங்க் குரூப் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து, ரூ.13 லட்சம் கோடியில் ‘உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் திட்டத்தை’(தற்போது உள்ள சூரிய மின் திட்டங்களை விட 100 மடங்கு பெரியது) தொடங்க உள்ளது.

#  இராணுவ சட்டத்தை மீறி, இராணுவத்தில் பணிபுரிய மறுத்தால் அல்லது இடையில் வெளியேறினால் இளைஞர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

#  கத்தாரை தீவுப் பகுதியாக மாற்றும் வகையில் கடல் சார்ந்த கால்வாய் அமைக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

#  இந்திய குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ மூன்று நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தியா மற்றும் சுவாசிலாந்து இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

#  அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் ‘கிம் ஜோங் உன்’ தயாராக உள்ளார் என்று வட கொரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தேசிய செய்திகள்

#  பள்ளிகளில் காலை வேளையில் நடைபெறும் பிராத்தனைக் கூட்டத்தை 11 மணி முதல் 1 மணிக்குள்ளாக நடத்த(மாணவர்கள் வைட்டமின் ‘டி’ ஊட்டச்சத்தை அதிகம் பெரும் விதத்தில்) பள்ளிகளை ஊக்குவிக்க ‘தூப்’ என்ற திட்டத்தை இந்திய பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது.

#  ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்களுக்கான ‘புல்லட் ப்ரூப் ஜாக்கெட்’ தயாரிப்பதற்காக எஸ்.எம்.பி.பி. என்கிற தனியார் நிறுவனத்துடன் ரூ.639 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

#  மத்திய அரசு, திருநங்கைகள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்கள் தங்கள் பாலினத்தை குறிக்க தனிப்பிரிவை(49ஏ, 49ஏஏ) வழக்கியுள்ளது.

#  பீகார் மாநிலத்தின் கத்திஹார்-பழைய டெல்லி இடையே புதிய இரயில் சேவையையும், மாதேபுரா பகுதியில் இரயில் பெட்டிகளை தயாரிக்கும் புதிய தொழிற்சாலையையும் பிரதமர் ‘நரேந்திர மோடி’ இன்று தொடங்கி வைத்தார்.

#  டெல்லியில், பால் பொருட்களை தினமும் சோதனையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் ‘சத்யேந்தர் ஜெயின்’ உத்தரவிட்டுள்ளார்.

#  ஜுன் 7ம் தேதி முதல் காப்பீடு சிகிச்சைகளில் இருந்து விலக இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

#  கணினி மூலம் தயாரிக்கப்பட்டுள்ள(வீரர்கள் கலந்து கொண்ட போட்டிகள், வெற்றிகளின் எண்ணிக்கை, வெற்றி பெற்ற செட் விவரங்கள் அடிப்படையில்) சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ‘கிடாம்பி ஸ்ரீகாந்த்’ முதலிடம் பிடித்துள்ளார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீட்டர் பிரிவில் இந்தியாவின் ‘ஹீனா சித்து’ தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

#  தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் 1,500மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ‘வேதாந்த்’(நடிகர் மாதவனின் மகன்) வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

#  2018 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ‘பேட் கம்மின்ஸ்’ விலகியுள்ளார்.

#  ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து வீரர் ‘டேவிட் வில்லி’ சேர்க்கப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

#  அவுஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானியான ‘வீணா சகஜ்வாலா’ உலகிலேயே முதன்முறையாக ‘மைக்ரோ’(எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும்) தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.

#  செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோபோ தேனீக்களை’ அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ‘மார்ஸ்பீஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

#  நாசா மற்றும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து மணிக்கு 1500 கிலோ மீட்டர் செல்லக்கூடிய ‘எக்ஸ் பிளேன்’ எனப்படும் ‘சூப்பர் சோனிக் விமானத்தை’ தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

புதிய நியமனம்

#  மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்(யுபிஎஸ்சி) புதிய உறுப்பினராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ‘எம்.சத்தியவதி’(தொழிலாளர் நலத்துறை செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

#  சுவாசிலாந்து நாட்டில் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி லயன் விருதை’ இந்திய குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்துக்கு’ அந்நாட்டு அதிபர் மூன்றாம் ‘முசுவாதி’ வழங்கினார்.

#  பத்மாவத் திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த நடிகர் ‘ரன்வீர் சிங்’, சிறந்த நடிகருக்கான ‘தாதா சாகேப் பால்கே விருதுக்கு’ பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள்

#  வாராக்கடன் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.

#  இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை அளிக்கும் நிறுவனமான எச்டிஎப்சி வங்கி, 5 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியை உயர்த்தியுள்ளது. இதில் ரூ.30 லட்சத்திற்கு அதிகமான அடமான கடன்களின் வட்டி விகிதம் 0.2 சதவீதமும், ரூ.30 லட்சத்திற்கு குறைவான கடனுக்கு 0.05 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

#  2017-2018ம் நிதியாண்டில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் முதலீடு ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

#  கூடங்குளம் அணு மின் நிலையில் 2 யூனிட்களை செயல்படுத்த, ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்திடம் ரூ.1,081 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top