Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 11-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 11-04-2018

உலக செய்திகள்

#  உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு வருடமும் தொற்றில்லா நோய்களால் 4 கோடி பேர் மரணம் அடைகின்றனர் என தெரிவித்துள்ளது.

#  சுவாஸிலாந்து நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு 1 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.6.5 கோடி) நிதியுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

#  பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 20ம் தேதி திறக்கப்படவுள்ளது.

#  அமெரிக்க  அதிபர் ‘டொனால்ட் டிரம்பின்’ ஆலோசகர் ‘டாம் போஸ்ஸர்ட்’ பதவி விலகியுள்ளார்.

#  சீனாவில் இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகனங்கள் மீதான வரியை குறைத்து , அறிவுசார் சொத்து நிறுவனங்களை பாதுகாக்க உறுதி பூண்டிருப்பதாக சீன அதிபர் ‘ஜின்பிங்’ தெரிவித்துள்ளார்.

தேசிய செய்திகள்

#  தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் நடைபெற்றது.

#  மத்தியப் பாதுகாப்புத் துறை சார்பில் பிரம்மாண்ட இராணுவ கண்காட்சி(டெப் எக்ஸ்போ 2018) சென்னையில் இன்று தொடங்கியது.

#  ஜிஎஸ்டி வரி வரம்புக்குட்பட்ட பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான இணையவழி ரசீது(இ-வே-பில்) முறை ஏப்ரல் 15ம் தேதி முதல் 5 மாநிலங்களுக்கிடையே அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#  சாலை விபத்தில் முழு ஊனமடைந்த இராணுவ அதிகாரிக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.74 லட்சமாக உயர்த்தி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#  துணை நிலை ஆளுநர்களுக்கான ஊதியத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

#  காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில்  பெண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ‘ஸ்ரேயாசி சிங்’ தங்கம் வென்றார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ‘ஓம் மிதர்வால்’ வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ‘அன்கூர் மிட்டல்’ வெண்கலப்பதக்கம்  வென்றார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு(சரத் கமல், அமல் ராஜ், சத்தியன்) தலா ரூ.50லட்சம் வழங்க முதல்வர் ‘எடப்பாடி கே. பழனிசாமி’ உத்தரவிட்டுள்ளார்.

#  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக(ஜாஹிர் கான் பதிலாக) நியூசிலாந்து பந்துவீச்சாளர் ‘இஷ் சோதி’ சேர்க்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள்

#  நடப்பு நிதி ஆண்டின் நாஸ்காம் தலைவராக ‘ரிஷாத் பிரேம்ஜி’ நியமிக்கப்பட்டுள்ளார்.

#  ஆப்பிள் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையில் நூறு சதவீத மின்சார உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளது.

#  புதிய 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

#  ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வங்கிகள் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உயரும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

#  விரிவாக்க திட்டங்களுக்காக, ‘ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா’(ஹெச்எம்எஸ்ஐ) நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

#  நடப்பு நிதியாண்டில் சராசரி சம்பள உயர்வு 9.6 சதவீதமாக இருக்கும் என கேபிஎம்ஜி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

#  இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் 2025ம் ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

தங்க ஈ.டி.எஃப்(எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ்) திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் சென்ற நிதியாண்டில் ரூ.835 கோடியை விலக்கிக் கொண்டுள்ளதாக பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின்
புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top