Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 12-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 12-04-2018 


உலக செய்திகள்

#  உலகின் முதல் தானியங்கி கப்பலை நார்வேயை சேர்ந்த யாரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கப்பலுக்கு ‘யாரா பெர்க்லேன்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

#  சமூக வலைத்தளமான கூகுளின் ஆர்குட், முகநூலுக்கு போட்டியாக ‘ஹலோ’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

#  மியான்மர் நாட்டில் ரோஹிங்கயா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

#  அமெரிக்காவுக்கு, சுற்றுலா மற்றும் வர்த்தகம் தொடர்பாகச் செல்பவர்களுக்கு விசா வழங்குவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ‘கென்ட் மே’ தெரிவித்துள்ளார்.

#  இந்தியா-ஜாம்பியா இடையே, இரட்டைவரி விதிப்பு தடுப்பு, நீதித்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தேசிய செய்திகள்

#  ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட ‘ஐ.சி.ஜி.எஸ்.விக்ரம்’ என்ற அதிநவீன புதிய ரோந்து கப்பல், இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.

#  16வது சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

#  அமர்வுகளை அமைக்கவும், வழக்குகளை ஒதுக்கீடு செய்யவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

#  யூனியன் பிரதேசத்தை சேர்ந்த துணை நிலை ஆளுநர்களின் சம்பளத்தை ரூ.2.25 லட்சமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

#  தமிழகத்தில் அம்மா உணவகம் போன்று கேரளாவில் ‘பீப்புள்ஸ் ரெஸ்டாரன்டை’(ஆலப்புழை) அம்மாநில அரசு அமைத்துள்ளது.

#  பென்ஷன் கணக்குடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்காத ஓய்வூதியர்களுக்கு, பென்ஷன் அளிப்பதை மறுக்கக் கூடாது என்று ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

#  எல்லையில் பணிப்புரியும் இந்திய இராணுவ வீரர்கள் சீனாவின் 41 செல்போன் செயலிகளை பயன்படுத்தக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

#  காமன்வெல்த் விளையாட்டில், ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ‘சுஷில் குமார்’ தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ‘ராகுல்’ தங்கப்பதக்கம் வென்றார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்காக மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ‘பபிதா குமாரி’ வெள்ளிப்பதக்கம் வென்றார்.

#  காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவில் இந்தியாவின் ‘தேஜாஸ்வினி’ வெள்ளிப்பதக்கம் வென்றார்.

#  தமிழகத்தில் நடைபெற இருந்த 6 ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு(காவிரி போராட்டம் காரணமாக) மாற்றப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

#  போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

முக்கிய தினங்கள்

#  ஏப்ரல் 12 – உலக விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி தினம்

வர்த்தக செய்திகள்

#  உலக அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் இறக்குமதியில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது. சீனா முதலிடத்தில உள்ளது.

#  மேற்கு கடலோர எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் 50 சதவித பங்குகளை, சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

#  இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதமும் #  அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமும் வளர்ச்சி அடையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) தெரிவித்துள்ளது.

#  உபெர் நிறுவனம் தனது ஓட்டுநர்களுக்காக ‘Earnings tracker’ வசதியுடன் கூடிய புதிய மொபைல் ஆப் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

#  உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பிள் நிறுவனங்கள் 100 சதவீதம் மரபுசாரா எரிசக்தியில் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#  இந்திய மோட்டார் வாகன சந்தையில் 2018 மார்ச், விற்பனையில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசூகி ஆல்டோ முதலிடத்தில் உள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top