Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 13-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 13-04-2018 


உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்கள் பட்டியலில்(35 நாடுகளில்) ஆண்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். பெண்கள் பிரிவில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் அரசு பதவி வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியாவில் 7 தீவுகளை கொண்ட நாடு – மால்டா. இதன் தலைநகர் வல்லெட்டா.

ஆஜர்பைஜானின் பதிய அதிபராக இல்ஹெ அலியேவ் 4வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில், ரியால் கார்ல்டன் ஓட்டலில் ஃபேஷன் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதன் முறையாக பெண்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவதற்கு, குலுக்கல் முறையில் ஆட்களை தேர்வு செய்ய அமெரிக்க குடியிறக்கத் துறை முடிவு செய்துள்ளது.

தேசிய செய்திகள்

உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்கள் பட்டியலில்(35 நாடுகளில்) இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமிதாப்பச்சன் முறையே 8, 9வது இடத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜுலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அம்பேத்கார் பிறந்த தினமான நாளை(ஏப்ரல் 14), அவர் பிறந்த இடமான மோவ்(இந்தூர்) கிராமத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார்.

அடுத்த 8 மாதங்களில் சந்திராயன்-2 உள்ளிட்ட மேலும் 9 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏப்ரல் 22ம் தேதி முதல் 25 தேதிகளில் சீனா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். 

காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ராபிட் பையர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டில் மல்யுத்தப் போட்டியில் 97 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மவுஸம் காத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபில் பிரிவில் இந்திய வீராங்கணைகள் தேஜஸ்வினி தங்கப்பதக்கமும், அஞ்சும் மௌட்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

காமன்வெல்த் விளையாட்டில் விதிகளை மீறிய காரணத்தினால் இந்திய தடகள வீரர்கள் இருவர்(ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கோலோதும்) வெளியேற்றப்பட்டனர்.

2011ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி பயன்படுத்திய துடுப்பு மட்டை ஏலம் விடப்பட்டுள்ளது. இதை ரூ.91.4லட்சத்திற்கு(1 பவுண்டு) ஆர்.கே.குளோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டி நிறுவனம் வாங்கியுள்ளது. இது உலகிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன துடுப்பு மட்டை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

விருதுகள்

சேகர் கபூர் தலைமையில் உருவாக்கப்பட்ட 65வது  தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

65வது தேசிய  திரைப்பட விருதுகள்

இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு காற்று வெளியிடை மற்றும் மாம் என்ற திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசை இசையமைப்பாளர் ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி(மாம் படத்திற்காக) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பகத் பாசிலுக்கு(திரைப்படம் – தொண்டிமுத்தும் திரிக்சாக்சியமும்) அறிவிக்கப்பட்டுள்ளது.

தாதா சாகிப் பால்கே விருது பாலிவுட் நடிகை வினோத் கன்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அபிமானம் பெற்ற பிரபல திரைப்படத்திற்கான தேசிய பாகுபலி-2 படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதுக்கு ‘டூ லெட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது டேக் ஆஃப் மலையாள படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆகபஷன் டைரக்டராக ராஜமவுலி(படம் – பாகுபலி) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடகருக்கான விருது ஜேசுதாசுக்கு(மலையாளப் படத்திற்காக) அறிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் அல்யூரன்ஸ், 2017 விருது வழங்கும் விழாவை இந்தோனேசியாவில் நடத்தியது

முக்கிய தினங்கள்

ஏப்ரல் 13 – ஜாலியன் வலாபாக் படுகொலை தினம்.

வர்த்தக செய்திகள்

வங்கிகள் வாரியக் குழுவின் புதிய தலைவராக மத்திய பணியாளர் நலத் துறை முன்னாள் செயலர் பானு பிரதாப் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், சர்வதேச மருத்துகக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டிற்கான ஹூருன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 73 பில்லியன் டாலர் சொத்துடன் அமென்சியோ ஒர்டிகா முதலிடத்தில் உள்ளது.

இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் பிப்ரவரியில் 7.1 சதவீதமாக அதிகரித்துள்ளது
 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top