Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 15-04-2018 | Get More Tamil & English Current Affairs

 Tamil Current Affairs 15-04-2018


உலக செய்திகள்

இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.

 700 கிலோ மீட்டர் இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று (14-04-2018) சோதனை செய்துள்ளது.

தேசிய செய்திகள்

 பிரதமர் மோடி மூன்று நாள் அரசுப் பயணமாக ஏப்ரல் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். பயண முடிவில் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல்லை சந்திக்க உள்ளார்.

 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மாநிலங்களவை எம்.பியாக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

 விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் புதிய சர்வதேச தலைவராக ஹிமாசலப் பிரதேச முன்னாள் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 உத்திரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து பீகார் மாநில அரசும் விளம்பரங்களில் இனி அம்பேத்கார் பெயருடன் ராம்ஜி பெயர் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னாநேவால் தங்கப்பதக்கத்தையும், பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ரா தங்கம் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50மீ. ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இநதியாவின் ராணுவ அதிகாரியான ராஜீவ் ராஜ்புத் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் பெண்கள் ஸ்குவாஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி மற்றும் சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

 காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சரத் கமல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஞாணசேகரன் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 பயன்பாட்டாளர்கள் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க ‘ஜி மெயிலில்’ புதிய வசதிகள் (ஒருவர் அனுப்பும் மின்னஞ்சலை பெறுபவர் அதனை வேறொருவருக்கு அனுப்பவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியாத வகையில்) ஏற்படுத்த உள்ளதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 விமான இருக்கை தேர்வில் 3டி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் முறையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

 ஆர்குட் நிறுவனரின் ஹலோ என்ற புதிய சமூக வலைதள செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகச் செய்திகள்

 முதலீட்டு சேவைகள் நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 91 சதவீதம் அதிகரித்தது.

 கல்வித்துறை தொழில்நுட்பங்களை வழங்கும் எம்பைப் நிறுவனத்தின் 73 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

 நிகழ் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் முதல் கட்ட தங்கப் பத்திர விற்பனை வரும் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.

 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top