Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 16-04-2018 | Get More Tamil & English Current Affairs

 Tamil Current Affairs 16-04-2018


உலக செய்திகள்

பசுமை நாடுகள் பட்டியலில் இந்தியா 177வது இடத்தில்(180 நாடுகளில்) உள்ளது.

 பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான தொழில்பயிற்சிப் பள்ளி ஒன்று (‘தி ஜெண்டர் கார்டியன்’)
துவங்கப்பட்டுள்ளது.

 புவிவெப்பமயமாதல் காரணமாக, ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 அயர்லாந்தின் மிக உயரமான ‘ஓகான்னெல் டவர்’ 47 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்

 உலக அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில்(35 நாடுகள்) ‘பிரியங்கா சோப்ரா’ 12வது இடத்தில் உள்ளார்.

 இந்திய ராணுவ கமாண்டர்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாடு தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறுகிறது.

 மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, அரியூரில்(புதுச்சேரி)
வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் ‘நரேந்திர மோடி’ திறந்து வைத்தார்.

 நாட்டில் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவில் முனைவர் பட்டம் படிப்பதாக மத்திய மனித மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 குழந்தைகள் பராமரிப்புக்காக விடுமுறையில் இருக்கும் அரசு ஊழியர்கள், வெளிநாடு செல்லலாம் என்று மத்திய பணியாளர் நல அமைச்சம் அறிவித்துள்ளது.

 இந்தியாவில் 153 மாவட்டங்கள் கடும் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இரயிலில் பயணம் செய்யும் பயணியர், தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க, புதிய மொபைல் போன், ஆப்(MADAD) எனப்படும், செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 டென் மார்க், பின்வாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் ‘நார்டிக் நாடுகள் உச்சி மாநாடு’ மற்றும் ‘காமன்வெல்த் நாடுகளின் தலைவல்கள் மாநாடு’, ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் ‘நரேந்திர மோடி’ ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து செல்ல உள்ளார்.

விளையாட்டு செய்திகள்

 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலயாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றது. அடுத்து நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகர் உரிமம் பெற்றுள்ளது.

 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ‘பேட் கம்மின்சுக்கு’ பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ‘ஆடம் மில்னே’ சேர்க்கப்பட்டுள்ளார்.

 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என 198 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என 136 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்தில் உள்ளது. 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு(சவுரவ் கோஷல் மற்றும் ஜோஸ்னாவுக்கு) தலா ரூ.30 லட்சத்தை பரிசளிக்க முதல்வர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ உத்தரவிட்டுள்ளார்.

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக ஆல் ரவுண்டர் ‘அபிஷேக் நாயர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 பாகிஸ்தான், 700 கி.மீ தொலைவில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘பாபர் ஆயுத திட்டம்-1(பி)’ என்ற ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.

 அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ‘யுஎல்ஏ அட்லஸ்’ என்ற ராக்கெட் 5 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

புதிய நியமனம்

 மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய நிதியமைச்சர் ‘அருண் ஜேட்லி’ நேற்று பதவியேறற்றார்.

முக்கிய தினங்கள்

 ஏப்ரல் 15 – டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினம்

 ஏப்ரல் 16 – சார்லி சாப்ளினின் 129வது பிறந்த தினம்.

வர்த்தக செய்திகள்

 12வது உலக வங்கிகள் ஆலோசனை கூட்டம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மே 3 தேதி முதல் மூன்று நாட்கள் நடக்க உள்ளது.

 பொது காப்பீட்டு பிரீமியம், 2017-2018ம் நிதியாண்டில், 17சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணைய புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.

 சேனல் மதிப்பீடுக்கு டிவி ‘செட் ஆப் பாக்ஸ்களில்’ சிப் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 பிஎப் சந்தாதாரர்கள் விரைவில் தங்களது பணத்தினைப் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை உயர்த்திக்கொள்ளக் கூடிய தேர்வை அளிக்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

 கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக மார்ச் காலாண்டில் மட்டும் வாராக்கடன் அளவு சுமார் ரூ.8,000 கோடி அதிகரித்துள்ளது.

 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top