Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 17-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 17-04-2018 


உலக செய்திகள்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு சிறந்த பத்திரிக்கைக்கான ‘புலிட்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

 இந்தியா உள்ளிட்ட 53 நாடுகள், காமன் வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து 2 ஆண்டுகள் இங்கிலாந்து இருந்து வருகிறது. லண்டனில் ‘பொது எதிர்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் காமன்வெல்த் மாநாடு இன்று தொடங்கியது.

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, கண்களுக்குப் புலப்படாத அதி நவீன ஜே-10சி போர் விமானங்களை(ரேடார்) சீனா தனது விமானப் படை சேவையில் இணைத்துள்ளது.

 ஜோர்டானுக்கான, இஸ்ரேல் தூதராக ‘அமீர் வீஸ்பிராட்’ பதவியேற்றார்.

 சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் அமீரகம் வமியாக செல்லும் பயணிகள் ஊரைச் சுற்றிப் பார்க்க தற்காலிக விசா வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது.

 அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில்(என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஜெர்மனி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தேசிய செய்திகள்

 நக்ஸல் பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில் 4,072 செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 இந்தியாவில் அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

 தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடரின மக்களின் பாரம்பரிய தையல் வேலைப்பாடான எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

 அமர்நாத் குகை கோயிலில், தேசிய பசுமை தீர்ப்பாயம், பனிலிங்கம் முன்பாக பக்தர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது அந்த கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

 இயற்கையாக காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவம் மற்றும் நன்னைகளைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக சமையலறை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை ஜம்மு – காஷ்மீர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

 தைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ‘யுகி பாம்ப்ரி’ சாம்பியன் பட்டம் வென்றார்.

 2018-2019ம் ஆண்டுக்கான உள்ளுர் சீஸனை விஜய் ஹசாரே கோப்பை ஆட்டங்களுடன் தொடங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.

 உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ‘ரபேல் நடால்’ முதலிடத்தில் உள்ளார். பெண்கள் பிரிவில் ருமேனியா வீராங்கனை ‘சினோனா ஹாலெப்’ முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ‘யுகி பாம்ப்ரி’ 83வது இடத்தில் உள்ளார்.

 இலங்கை கிரிக்கெட் அணிக்கு பீல்டிங் பயற்சியாளராக உள்ள தென் ஆப்பிரிக்காவின் ‘நிக் போதாஸ்’, இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்திற்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக கேரள மாநிலத்தை சேர்ந்த ‘பாஸ்கரன்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளார் ‘சுனில் நரேன்’, ‘ஐபிஎல் போட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த 3வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

 பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், பரிஸ்ஸா ஜெர்மன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 விண்வெளியில் பூமி போன்ற புதிய கிரகங்களை கண்டுபிடிக்க டி.இ.எஸ்.எஸ். என்ற புதிய விண்கலத்தை விண்ணில் ஏவ நாசா முடிவு செய்துள்ளது.

வர்த்தக செய்திகள்

 ரன்ஸ்டாட் இன்சைட்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் அளிக்கும் நிறுவனங்கள் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பெங்களுர் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஊழியர்களுக்கு ரூ.10.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

 மதிப்புமிக்க வங்கிகள் பட்டியலில் எச்டிஎஃப்சி வங்கி முதலிடத்தில் உள்ளது. மஹிந்திரா வங்கி 2வது இடத்தையும், எஸ்பிஐ 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

 மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மின்சார கார்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 மின் ஒளி மின்சார ஆலைகள் அமைப்பதில் சென்ற ஆண்டு 40 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசு மரபு சாரா எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top