Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 18-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 18-04-2018 


உலக செய்திகள்

->  ஐ.நா துணை அமைப்புக்கு உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளது.

->  இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு இடையே, இராணுவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

->  உலகத்தின் மிகப் பிரமாண்ட சரக்கு விமானம் இலங்கை மத்தல விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

->  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் மீது சீன அரசு கூடுதலாக 179 சதவீதம் வரி விதித்துள்ளது.

->  சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆய்வு குழுவுக்கு ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய செய்திகள்

->  நாட்டில் அதிக ஊதியம் வழங்கும் துறைகள் பட்டியலில் மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறை முதலிடத்தில் உள்ளது.

->  மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒரே தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

->  கர்நாடகா மாநிலத்தில் அதிமுக செயலராக எம்.பி. யுவராஜும், துணை செயலராக எஸ்.டி. குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.-> 

->  ஒரிஸா மாநிலத்தில் உள்ள போலிசார், கடந்த 70 ஆண்டுகளாக புறா மூலம் தூதுவிடுவது, செய்தி அனுப்புவது என்ற பாரம்பரிய முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். புறாக்களை பாதுகாப்பதற்கு என தனி பிரிவு போலீஸாரிடம் உள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  வடதுருவத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த வீரர் ‘அரிகிரியோஸ்’ முதலிடம் பிடித்துள்ளார்.

->  ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோன் பிஞ்ச் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் டி20 போட்டியில் 7 அணிக்களுக்காக விளையாடியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

->  தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் ‘பாலி எத்திலீன் டெராபைத்லேட்டை’ அழிக்கும் ‘இண்டோனெல்லா சகைஎன்சிஸ்’ பாக்டீரியங்களை பயன்படுத்தி பிளாஸ்டி கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம்.

வர்த்தக செய்திகள்

->  மொபைல் கட்டண பேக்கேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்காக புதிய இணையதளத்தை டிராய் உருவாக்கியுள்ளது.

->  தமிழகத்தில் தொழில் முதலீடு கடந்த ஆண்டில் 3 மடங்கு சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

->  இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 மில்லியன் டாலர் நிதியை ஸ்பெஷல் போனஸாக அறிவித்துள்ளது.

->  இணையதளம் மூலம் புதியதாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் வரி கணக்கை தாக்கல் செய்ய புதிய விண்ணப்பம் படிவத்தை (ஐடிஆர்-1) வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

->  நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், 500 ரூபாய் நோட்டை கூடுதலாக அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top