Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 19-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 19-04-2018 

Tamil Current Affairs 19-04-2018

உலக செய்திகள்

->  அமெரிக்க உளவு துறை அமைப்பான சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக ‘கினா ஹஸ்பெல்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

->  சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 12 துறைகளில் வெளிநாட்டுப் பயணியாளர்கள் பணிபுரிய அல்லது தொழில் செய்ய தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

->  சவுதி அரேபியாவில் 38 அண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது. இங்கு முதன் முதலாக ‘பிளாக் பந்தர்’ என்ற ஹாலிவுட் படம் திரையிடப்பட்டது.

->  அமெரிக்கா கவாய் தீவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரண உதவிக்காக பேஸ்புக் நிறுவனர் ‘மார்க் ஜுக்கர்பெர்க்’ 10 லட்சம் டாலர் வழங்கியுள்ளார்.

->  அமெரிக்காவின் மாசசூஸெட்ஸில் உள்ள எச்இஐ நிறுவனம் சுவாசம் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. உலகில் 95 சதவீத மக்கள் சுகாதாரக் குறைவான காற்றை சுவாசிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

->  பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் ‘நரேந்திர மோடி’ அந்நாட்டு பிரதமர் ‘தெரஸா மேவை’ சந்தித்தார். பயங்கரவாதத்தை ஒடுக்கவது குறித்து இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.

->  ரஷ்யா மீது விரைவில் பொருளாதார தடை விதிக்கப்பட உள்ளது என அமெரிக்க அதிபர் ‘டொனால்டு டிரம்ப்’ அறிவித்துள்ளார்.

தேசிய செய்திகள்

->  ஆந்திர முதல்வர் ‘சந்திரபாபு நாயுடு’ ஏழை பெண்களுக்கு திருமன உதவித்தொகை வழங்கும் நோக்கில் ‘சந்திரனா பெல்லி கனகா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தில் கலப்பு திருமணங்களும் ஏற்றுகொள்ளப்படுகின்றன.

->  இந்திய இரயில்வேயில் பணிகாலத்தின் போது இரயில்வே டி பிரிவு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க கல்வித் தகுதி தேவையில்லை என்ற புதிய விதியை இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது.

->  தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கவும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கைகுறித்து ஜுலை 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

->  வருமான வரித்துறை ஊழியர்களுக்கு ‘ஆப்பரேஷன் டிரஸ் கோடு’ என்ற பெயரில் ஆடை கட்டுப்பாடு விரைவில் அமலுக்கு வரவுள்ளது என வருமான வரித் துறை தலைமை கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  2018 ஐபிஎல் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றுள்ள அணிகள் தரவரிசை பட்டியலில் ‘கொல்கத்தா அணி’ முதலிடத்தில் உள்ளது.

->  12வது தெற்காசிய கால்பந்து கோப்பை(சாஃப்) போட்டியில் இந்தியா, குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

->  கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷீர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர்(தமிழ்நாடு) வேலம்மாள் பள்ளி மாணவர் ‘பிரக்ஞானந்தா’ முதலிடம் பிடித்துள்ளார்.

->  ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக, ‘ஐஸ்டின் லாங்கர்’(அந்த அணியின் முன்னாள் வீரர்) நியமிக்கப்படவுள்ளார்.

->  மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பாளராக ‘பாண்டுரங் சல்கோன்கர்’ நியமிக்கப்படவுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  நாசா நிறுவனம் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக ‘டெஸ்’ என்ற செயற்கைக்கோளை, ‘பல்கான் ஹெவி’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

வர்த்தக செய்திகள்

->  மின்னணு ஆதார் கார்டிற்கான கடவுச் சொல் முறையை இந்திய தனிநபர் ஆதார் ஆணையமானது ஊர் தபால் குறியீட்டில் இருந்து மாற்றி 8 இலக்கமாக அறிவித்துள்ளது.

->  நாடு முழுவதும் 70000 கோடி ரூபாய் பணத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

->  மும்பை சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை ரூ.1000 ஆக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

->  கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்கம் 2.47 சதவிகிதமாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவானதாகும்.

->  தனியார் கேபிள், டிவி ஆப்ரேட்டர்கள் வழியாக, பிராட்பேண்ட், இண்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தை, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top