Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 20-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 20-04-2018 


உலக செய்திகள்

பாகிஸ்தான், ராவல்பிண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்துக்கு ‘மலாலா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

#  இஸ்ரேல் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு புறாக்களை கௌரவிக்கும் விதத்தில் ‘சிறகடிக்கும் வீரர்கள்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

#  ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா பயணிகள் இயற்கையான பகுதியில் முகாம் அமைத்து தங்குவதற்கு அதிக விலை வசூலிக்கும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

#  கியூபா நாட்டின் புதிய அதிபராக மிகேல் டயஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

#  அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிக்கை, உலக அளவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

#  பிரிட்டன் அரசி எலிசபெத், காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக, இளவரசர் சார்லஸை நியமித்துள்ளார்

தேசிய செய்திகள்

#  சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப் பயன்பாட்டில் (அதிக நேரம் செலவிடுவதன் மூலம்) இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இந்தோனேஷியாவும், 3வது இடத்தில் மெக்ஸிகோவும் உள்ளது.

#  அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, மனித உரிமைகள் ஆர்வலரும், வழக்கறிஞருமான இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

#  சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என தேசியப் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

#  தமிழகத்தில் 122 கோடி மதிப்பில் 45 துணை மின்நிலையங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

#  சுங்கச் சாவடிகளில் நிற்காமல், தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டணத்தை செலுத்துவதற்கான முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

#  2017 சிறந்த திரைப்பட இணங்க மாநிலங்களுக்கான விருது, மத்திய மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடுவர் குழுத் தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்துள்ளார்.

#  துப்புரவு, கழிவு மேலாண்மை, நோய்த்தொற்று தடுப்பு உள்ளிட்ட அளவீடுகளை எட்டாத மருத்துவமனைகளை அடுத்த ஆண்டு முதல் ‘காயகல்ப்’ திட்டத்தின் கீழ் பட்டியலிட மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

#  2020ம் ஆண்டில் 100 பந்து வீச்சுக்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது.

#  ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் உள்ள பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 11வது ஐ.பி.எல் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

#  ரஷ்யாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 விடியோ உதவி நடுவர்கள் மற்றும் இராட்சத திரைகள் வைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிஃபா) அறிவித்துள்ளது.

#  தேசிய அளவிலான இளையோருக்கான தடகளப்போட்டிகள் இன்று கோவை விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

#  சிங்கப்பூரில் உள்ள நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை தயாரித்துள்ளது. இந்த ரோபோக்கள் 9 நிமிடத்தில் ஒரு நாற்காலிகளை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது.

வர்த்தக செய்திகள்

#  19 கோடி இந்தியர்களுக்கு வங்கிகளில் கணக்கு இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

#  பணத்தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையாக, பொருட்கள் வாங்கும் இடங்களிலும் ஏடிஎம் அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என பாரத் ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது.

#  டாடா குழுமத்தைச் சேர்ந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நான்காவது காலாண்டில் ரூ.6,904 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

#  தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

 முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

#  காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் மற்றும் செஷெல்ஸ் அதிபர் டேனிஃபாரே ஆகியோரை சந்தித்தார்.

#  ஏப்ரல் 21ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்திற்கு பாகிஸ்தான கிரிக்கெட் வாரிய தலைவர் நஜித் ஷேதி மற்றும் குழுவினர் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் இந்தியா வருகின்றனர்.

#  இந்திய கடற்படைத் துணைத் தளபதி அஜித் குமார் நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
Get More Tamil & English Current Affairs  >> 

Related Post:

0 Comments
Back To Top