Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 21-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 21-04-2018 

Tamil Current Affairs 21-04-2018

உலக செய்திகள்

->  2025ம் ஆண்டில் உலகை ஆளக்கூடிய பெருநகரங்கள் குறித்த பட்டியலை மெக்கன்சி அண்ட் கம்பெனி என்னும் நிறுவனம் வெளியிட்டது. இதில் லண்டன் மாநகரம் முதலிடத்தில் உள்ளது. பாரிஸ் 2வது இடத்தில் உள்ளது.

->  பிரிட்டன் வின்ட்ஸோர் கோட்டையில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று முடிவடைந்தது.

->  அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாகவும் சோதனை தளத்தை மூடுவதாகவும் வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’ தெரிவித்துள்ளார்.

->  மாலத்தீவில், உலகிலேயே முதன் முறையாக கடலுக்கடியில் கட்டப்பட்டு வந்த சொகுசு விடுதி நவம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது.

->  துபாய், மினா ரஷீத் துறைமுகத்தில் மிதக்கும் நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.

->  இலங்கையில் உள்ள சுற்றுலா மையங்களையும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய போலீஸ் சாவடிகள் அமைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

->  சீன அரசு, வைபை, ஏடிஎம், டிவி ஆகிய நவீன வசதிகளுடன் கூடிய பப்ளிக் டாய்லெட்டுக்களை அறிமுகம் செய்துள்ளது.

தேசிய செய்திகள்

->  மாநில முதல்வர்களின் அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கங்களில் உத்திரப்பிரதேச முதல்வர் ‘யோகி ஆதித்யநாத்’ பேஸ்புக் பக்கம் முதலிடத்தில் உள்ளது.

->  அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் புதிய முறையை குரூப் ஏ தேர்வில் டிஎன்பிஎஸ்சி முதல் முறையாக அறிமுகப்படுத்த உள்ளது.

->  12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

->  ஜார்க்கண்ட் மாநில அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மருத்துவ படிப்பிற்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி மருத்துவ படிப்பை இடைநிறுத்தம் செய்பவர்களுக்கு ரூ.20 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் மற்றும் படிப்புக்கு பின் அரசு மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணிப்புரிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

->  தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க தேர்தல்களை நடத்த உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடத்தலாம் ஆனால் வழக்கு முடியும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

->  ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ‘சுஷ்மா ஸ்வராஜ்’ இன்று சென்றுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களுரு எஃப் சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

->  2018 ஐபிஎல் தொடரின் 11-வது சீசனின், 17வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

->  சிறந்த விளையாட்டு விரர் – வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை ‘மணிகா பத்ராவின்’ பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

->  ஹீரோ இன்டர் காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து சீன தைபே அணிகள் மோதுகின்றன.

முக்கிய தினங்கள்

ஏப்ரல் 21 – உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம்.

வர்த்தக செய்திகள்

->  ஆவின் நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் செயல்படும் பால் விற்பனை மையம், புதிய நவீன பாலகங்கள் மற்றும் புதிய பொருட்கள், புதிய செயலிகள் ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் ‘ராஜேந்திர பாலாஜி’ நேற்று தொடங்கி வைத்தார்.

->  வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க ஆதார் அட்டை கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

->  வீட்டு வசதி தேவைகளுக்கு கடனுதவி அளித்து வரும் இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டில் ரூ.1,030 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

->  ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

->  சென்னையில் உள்ள நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலையை ஏற்று நடத்த, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் முன் வந்துள்ளது.

இறப்பு செய்தி

->  டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ‘ராஜிந்தர்சிங் சச்சார்’ நேற்று காலமானார்.
Get More Tamil & English Current Affairs >>

Related Post:

0 Comments
Back To Top