Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 22-04-2018 | Get More Tamil & English Current Affairs


Tamil Current Affairs 22-04-2018

Tamil Current Affairs 22-04-2018


உலக செய்திகள்

->  வங்க தேசத்திற்கு அகதிகளாக வந்த ரோஹிங்கயா முஸ்லீம்களை மீண்டும் சேர்த்து கொள்ள மியான்மருக்கு காமன்வெல்த் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

->  ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது.

->  உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு 226 விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பன்னாட்டு பண நிதியம் தெரிவித்துள்ளது.

->  அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மனச்சோர்வு அதிகளவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) மாகாண பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

தேசிய செய்திகள்

->  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

->  தினை, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

->  தெலுங்கானா மாநில அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

->  தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

->  பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கருப்பு பணப்புழக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவராக ஒலிம்பியன் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

->  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 2ம் நிலை போட்டிகள் தென் கொரியாவின் சாங்வோன் நகரில் நடைபெற உள்ளது.

வர்த்தக செய்திகள்

->  ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை விரைவில் அமலாக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

->  ஹெச்டிஎஃப்சி வங்கி நான்காம் காலாண்டில் ரூ.4,799.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

->  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய மின் ஆளுமை சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

->  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டின் 51 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  குழந்தை கருவில் உருவான உடனே அதன் டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் அதன் குணத்தை மாற்ற முடியும் என கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி என்ற மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 22 – உலக பூமி தினம்

->  ஏப்ரல் 21 – பிரிட்டன் ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

->  சுவீடன் மற்றும் பிரிட்டன் பயணத்துக்கு பின் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.

இறப்பு செய்தி

->  உலகிலேயே முதன் முதலாக அணுகுண்டு தயாரித்த நெர்சஸ் கிரிக் கிகோரியன் (97) கடந்த 18ம் தேதி காலமானார்.

->  உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான ஜப்பானைச் சேர்ந்த நபி தஜிமா (117) உடல் நல குறைவு காரணமாக நேற்று காலமானார்.

->  ஐரோப்பாவின் மின்னணு நடன இசைக் கலைஞர், ஆவிசி என்றழைக்கப்படும் டிம் பெர்கிளிங் (28) நேற்று முன்தினம் காலமானார்.
Get More Tamil & English Current Affairs >>

Related Post:

0 Comments
Back To Top