Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 23-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 23-04-2018

Tamil Current Affairs 23-04-2018

உலக செய்திகள்

->  ஸ்வாசிலாந்து(ஆப்பிரிக்கா) நாட்டு அதிபர் ‘முஸ்வாதி’ அந்நாட்டின் பெயரை ‘ஈஸ்வாடினி’ என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

->  இந்தியர்கள் அதிகம் குடியேற விரும்பும் நாடுகள் பட்டியலில், நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

->  உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ‘டேரன் ஆரோன்ஸ்கி’, நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், ‘ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்’ என்ற ஆங்கில சீரியலை எடுத்துள்ளார்.

->  உலகில் முதன் முறையாக ‘கருப்பு நிறச் சுறா மீன்’ இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

->  வேற்றுகிரகங்களைக் கண்டுபிடிக்க ‘டார்க்நேஸ்’ என்ற புதிய சூப்பர்மார்க்கிங் கேமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தேசிய செய்திகள்

->  பள்ளிக்கூடங்களில், 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய இடைநிலை கல்வி வாரியமான, ‘சி.பி.எஸ்.இ’ உத்தரவிட்டுள்ளது.

->  ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, வீட்டில் கழிப்பறை இல்லாத அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

->  2020-2015ம் ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்புக்கென ரூ.3,50,000 கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ‘ராஜ்நாத் சிங்’ அறிவித்துள்ளார்.

->  ஐஐடி முன்னாள் மாணவர்கள் 50 பேர் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். இதற்கு ‘பகுஜன் ஆசாத் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

->  அரசு துறைகளில் மக்களின் குறை தீர்வுப் பிரச்சனைகளுக்கு, எளியதாக பயன்பட கூடிய புதிய செயலியை ‘நோவிங்கே’, டெல்லி இந்திரப்பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் அறிமுகம் செய்ய உள்ளனர்.

->  இந்தியர்களுக்கான ஹஜ் புனித பயண ஒதுக்கீடு அனுமதி, ஒரு லட்சத்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

->  மத்திய பொதுப் பணித்துறை(சி.பி.டபிள்யூ.டி) சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், சண்டீகர் காவல் துறை டிஎஸ்பி பிரிவை டெல்லி காவல் துறை உள்பட அனைத்து யூனியன்ட பிரதேச காவல் துறையுடன் இணைத்துள்ளது.

->  நிதி மோசடி, வங்கிக் கடன் மோசடி மற்றும் ஊழல் என பொருளாதார குற்ற வழக்கில் சிக்கியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்திற்கும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் புதிய சட்டத்திற்கும், குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ ஒப்புதல் வழங்கியுள்ளார்.

->  இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  2018 ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர், ‘ரெய்னா’ ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

->  நேபாளத்தில் நடைபெற்ற 8-வது தெற்காசிய ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

->  உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ‘ரஃபேல் நடால்’ 11வது முறையாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

->  கோபா டெல் ரே கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

->  தமிழகத்தில், நடைப்பெற்ற தேசிய அளவிலான 16-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான இளையோர் தடகளப் போட்டியில் ஹரியானா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணி 2வது இடத்தை பெற்றுள்ளது.

->  18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் ஏப்ரல் 26ம் தேதி தொடங்குகிறது.

புதிய நியமனம்

->  இந்தியாவில் விமான நிலைய தீயணைப்பு பணிக்கு முதல் முறையாக ‘தனியா சன்யால்’ என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 23 – சர்வதேச புத்தக தினம்.

வர்த்தக செய்திகள்

->  ஜன்தன் வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.80,545 கோடியாக அதிகரித்துள்ளது.

->  வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

->  ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், என்பிஎஸ்(தேசிய ஓய்வூதிய திட்டம்) சந்தாதாரர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

->  இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலத்தனத்தினைப் பெற்ற நிறுவனம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
Get More Tamil & English Current Affairs >>

Related Post:

0 Comments
Back To Top