Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 25-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 25-04-2018 

Tamil Current Affairs 25-04-2018

உலக செய்திகள்

->  சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் முதல் முறையாக ஊழியர் இல்லாமல் தானாக இயக்கும் (எந்திரம், பேசும் ரோபோக்கள் மூலமாக) அரசு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

->  சவுதி அரேபியாவில் வருமானத்தை அதிகரிப்பதற்காக பொழுதுபோக்கு நகரத்தை உருவாக்க முகமது பின் சல்மான் (இளவரசர்) திட்டமிட்டுள்ளார்.

->  ஆர்டிக் கடல் பனியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் பனிக்கட்டியில் 12 ஆயிரம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்

->  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பிங்க் அல்லது சகி வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

->  வங்கதேசம், நேபாளம், இந்தியா நாடுகளுக்கு இடையிலான பயணிகள் பேருந்து சேவையின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

->  இந்தியாவில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆபத்து சமயங்களில் பயன்படுத்தும் பொத்தான்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு செய்திகள்

->  தென் கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஷாஹ்சார் ரிஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

->  2019-ம் ஆண்டு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா நடத்தும் என ‘உஸ்பெகிஸ்தான் அர்கெஞ்ச் நகரில் நடைபெற்ற பளுதூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில்’ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

->  ஐ.பி.எல் போட்டியில் இருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாதின் பில்லி ஸ்டான்லேக் (வலதுகையின் சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக) விலகியுள்ளார்.

வர்த்தக செய்திகள்

->  ‘ஏசியாமணியின் வருடாந்திர வங்கித் துறை விருது வழங்கும் விழாவில் கொமர்ஷல் வங்கி மூன்று (‘சிறந்த வங்கி’, ‘பிரீமியம் வங்கிச் சேவையில் சிறந்த வங்கி’ மற்றும் ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தில் சிறந்த வங்கி’) விருதுகளைப் பெற்றுள்ளது.

->  டில்லி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான சுங்க வரியில்லா கடைகளில் இனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

->  எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.539.33 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் தேடுதல் தளத்தின் வாயிலாக வேலைவாய்ப்புகள் தேடும் சேவையை (கூகுள் ஃபார் ஜாப்ஸ்) என்ற வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நியமனம்

->  சிங்கப்பூரில் கேபினட் அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் இந்திராணி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

->  அமெரிக்காவில் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக மைக்கேல் பாம்பியோவை (சிஐஏ-வின் இயக்குநர்) அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.

->  பங்களாதேஷில் 2வது முறையாக அப்துல் ஹமீத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

->  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மங்கோலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 25 – சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்

->  ஏப்ரல் 25 – மார்க்கோனி (வானொலியை கண்டுபிடித்தவர்) பிறந்த தினம்
Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top