Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 26-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 26-04-2018 

Tamil Current Affairs 26-04-2018

உலக செய்திகள்

->  பத்திரிக்கை சுதந்திரம் அளிப்பதில் இரண்டாவது முறையாக நார்வே முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இந்தியா 138வது இடம்)

->  நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் வாஸ்ப் – 104பி என்ற கிரகத்தை பிரிட்டனிலுள்ள கீல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

->  வங்காள தேசத்தின் பிரதமர் சேக் அனிஷா-விற்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

->  ரஷ்யாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட (ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட “வேரா” என்ற ரோபோ இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது தற்போது இண்டர்வியூ செய்வது மட்டுமல்லாமல் வேலை தேடுபவர்களை அதுவாகவே அழைக்கும் பணியையும் செய்து வருகிறது.

->  மின்சாரம் பாய்ச்சினால் அதிக எடையை தூக்கும் திறன் கொண்ட செயற்கை தசைகளை இல்லினாய் (அமெரிக்கா) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

->  ஆழ்ந்த தூக்கத்தில் குறட்டை விடுவோருக்கு உதவ ‘ஸ்லீப் இயர் பட் என்ற காதில் அணியும், ‘இயர் போன்’ கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

->  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குவாஜா ஆசிப்பை இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

தேசிய செய்திகள்

->  உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

->  யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

->  ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் அந்த பதவியில் இருந்து விலகுவதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

->  இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெயரை துரோணாச்சாரியர் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

->  ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுகா ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

->  கேல் ரத்னா விருதுக்கு விராட் கோஹ்லி (இந்திய அணி கேப்டன்), மற்றும் விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுக்கு சுனில் கவாஸ்கர் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

->  விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தனா பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 26 – அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

->  சீனாவில் 27, 28ம் தேதி நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சீனா செல்ல உள்ளார்.

->  இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மங்கோலியா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்தியா – மங்கோலியா இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள்

->  நடப்பாண்டின், முதல் அரையாண்டில், ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் சராசரியாக 7.8 சதவீதமாக உயரும் என நோமுரா (ஜப்பானன்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

->  சாப்ட்வேர் நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜீஸ் நிறுவனம் காலாண்டில் ரூ.72.65 கோடி லாபம் பெற்றுள்ளது.

->  ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

இறப்புச் செய்தி

->  இந்திய தடகள சங்கம் இணைச் செயலாலரும், தொழில்நுட்பக் குழு தலைவருமான டோனி டேனியல் (66) மாரடைப்பால் நேற்று காலமானார்.
Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top