Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 27-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 27-04-2018 

Tamil Current Affairs 27-04-2018 | Get More Tamil & English Current Affairs

உலக செய்திகள்

->  ஜப்பானில் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்துடன் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் ரோபோவை ரோபாடிக் எஞ்சினியர்ஸ் உருவாக்கியுள்ளனர்.

->  சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் அறிய வேண்டிய தகவல்களுக்கென “இன்ச்-செயலி” எனும் புதிய ஆப் ஒன்றை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

->  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

->  அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் வருமானம் ஒரே நாளில் 12 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

->  65 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தென் கொரிய அதிபர் மூன் ஜோவை சந்தித்துள்ளார்.

->  2018ம் ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர், உலகில் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சிஙகப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தேசிய செய்திகள்

->  மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசார குழு தலைவரைக ஜோதிராதித்யா சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.

->  இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்தித்துள்ளார்.

->  இந்தியாவில் வாழை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  2021ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை 20 ஓவர் போட்டிகள் உலகக் கோப்பை போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

->  2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

->  ஐ.பி.எல் 25வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

->  ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் உமேஷ் யாதவ் 5ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

->  இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பௌலிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

->  2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி யுனைடெட் அரபு அமிரகத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

->  மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இனி நடத்தப்படாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

வர்த்தக செய்திகள்

->  2017-18ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.19 லட்சம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

->  வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்களுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளது.

->  முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் மார்ச் காலாண்டு லாபம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

->  யெஸ் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.1,179.44 கோடி ஆகும்.
Get More Tamil & English Current Affairs >>

Related Post:

0 Comments
Back To Top