Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 29-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 29-04-2018 

Tamil Current Affairs 29-04-2018 | Get More Tamil & English Current Affairs

உலக செய்திகள்

->  பாகிஸ்தான் நாட்டின் புதிய நிதி அமைச்சராக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

->  தென் கொரியாவில் பின்பற்றி வரும் நேரத்தையே பின்பற்ற வட கொரியா முடிவு செய்துள்ளது. (வட கொரியா நாட்டின் நேரம் அரைமணி நேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது)

->  இந்தியாவும் சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

->  சர்வதேச அளவில் வல்லமை மிக்க நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உருவெடுத்து வருவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

->  ஜெருசலேமில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அமெரிக்க தூதரக கட்டிடத்தை திறந்து வைக்க ஜெருசலேம் செல்ல உள்ளதாக டிரம்ப் (அமெரிக்க அதிபர்) திட்டமிட்டுள்ளார்.

->  வட கொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

தேசிய செய்திகள்

->  மாநில முதல்வராக தொடர்ந்து அதிக ஆண்டுகளாக பதவி வகித்து சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் சாதனை படைத்துள்ளார்.

->  இந்தியா முழுவதும் டிவி செட் டாப் பாக்ஸ்களில் ‘சிப்’ பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

->  மத்திய அரசின் தீன தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஸ்னா திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

->  புதுச்சேரியில் சுத்தமான கிராமங்களுக்கு தான் இலவச அரிசி அளிக்கப்படும் என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜிக்கு மகளிருக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

->  உலக வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா – ஜோதி சுரேகா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

->  ஆசிய பாட்மிண்டன் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

->  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடையில் ஏற்பட்ட காணம் காரணமாக விலகியுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் மற்றும் பாறைகளின் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

->  யாழ் பல்கலைக்கழக (அமெரிக்கா) நிபுணர்கள் உயிருடன் உள்ள பன்றிகளின் மூளைகளை அகற்றி உயிருடன் இருக்க செய்து சாதனை படைத்துள்ளனர்.

->  கொலரோடா பல்கலைக்கழக (அமெரிக்கா) சேர்ந்த வேதியியலாளர்கள் சுற்றுச்சூழல்களுக்கு ஆபத்தை விளைவிக்காத வகையில் புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர்.

->  தேஜாஸ் போர் விமானம் மூலம் அதிநவீன பி.வி.ஆர் ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள்

->  2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை அடையும் என ராஜீவ் குமார் (மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

->  எல்.ஐ.சி. நிறுவனம் 2017-18ம் நிதியாண்டில் காப்பீட்டு திட்டங்களில் கீழ் முதலாண்டு பிரீமியம் வருவாயாக 1,34,552 கோடி அடைந்து சாதனை படைத்துள்ளது.

முக்கிய தினங்கள்

->  ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம்
 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top