Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

TNPSC Tamil Current Affairs ( 02-04-2018 ) | Get More Tamil & English Current Affairs

TNPSC Tamil Current Affairs ( 02-04-2018 )


உலக செய்திகள்

உலகத்திலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் நகரில் தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 சீன விண்வெளி ஆய்வு மையம் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பிய ‘டியாங்காங் 1 தெவ்’ பசுபிக் கடலில் விழுந்தது.

 பசுபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவுப்பகுதியான ‘பிஜி’ நாடு உள்பட ‘பா’ நகரை ‘ஜோசி புயல்’ தாக்கியது.

 அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 128 பொருட்கள் மீது சீன அரசு சுமார் 3 பில்லியன் டாலர் இறக்குமதி வரி விதித்துள்ளது.

 இலங்கையில் 2வது உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட கப்பல் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மிதக்கவிடப்பட்டுள்ளது.

 எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷ்யா இன்று சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றியில் முடிந்துள்ளது.

தேசிய செய்திகள்

 மேற்கு வங்கத்தில், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும், ‘ரூபஸ்ரீ’ திட்டத்தை, முதல்வர் ‘மம்தா பானர்ஜி’ துவக்கி வைத்தார்.

 இந்தியா மற்றும் தென்கொரியா இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை வீரர்களும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சியை மேற்கொள்ள தென் கொரிய கடலோர காவற்படை வீரர்கள் ‘பதாரா’ என்ற கப்பலில் சென்னை வந்துள்ளனர்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து தனியார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் உள்ள மொபைல் போன்களில் சீன சிக்கல் மற்றும் ‘வெல்கம் டூ சீனா’ என்ற மெசேஜ் வருவதாக அந்நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

 அருணாச்சல பிரதேசத்தில், 76 பேர் மட்டுமே வாழும் காஹூ (அஞ்சாவ்) என்ற கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

 தாய்லாந்தில் நடைபெற்ற அலைதுடுப்பு விளையாட்டு போட்டியில் 6 கிலோ மீட்டர் பிரிவில், இந்திய வீரர் ‘சேகர்’ தங்கம் வென்றார்.

 சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் ‘ஜெர்மனி அணி’ உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீரர் ‘ஜான் இஸ்னெர்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

 அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கணை ‘ஸ்லோனே ஸ்டீபன்ஸ்’ சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ‘ஸ்மீத்துக்கு’ பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ‘ஹெய்ன்ரிச் க்ளாஸென்’(தென் ஆப்பிரிக்கா) நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ‘மிட்சல் ஸ்டார்க்கிற்கு’ பதிலாக கொல்கத்தா அணியில் ‘டாம் குர்ரான்’ சேர்க்கப்பட்டுள்ளார்.

 45வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில், கேரள அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

முக்கிய தினங்கள்

 ஏப்ரல் 01 – ஒரிஷா தினம்.

 ஏப்ரல் 02 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.

வர்த்தக செய்திகள்

 உலகில் அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 புதிதாக கார் வாங்கும் போதே எண் பலகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ‘நிதின் கட்கரி’ தெரிவித்துள்ளார்.

 2017-2018ம் நிதியாண்டில் மட்டுமே சென்னை ஐசிஎப் சுமார் 2,500 இரயில் பெட்டிகளை தயாரித்து சாதனைப் படைத்துள்ளது.

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி), கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க ரூ.1.43 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

 சுசுகி ( Suzuki ) மற்றும் டொயோடா ( Toyota) நிறுவனங்கள், வியாபார ரீதியாக கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

 நாட்டின் மிகப் பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி கடந்த நிதியாண்டில் 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top