Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

TNPSC Tamil Current Affairs 03-04-2018 | Get More Tamil & English Current Affairs

TNPSC Tamil Current Affairs 03-04-2018


உலகச் செய்திகள்

# இத்தாலி நாட்டில் ஒரே நேரத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளது.

# அமெரிக்காவிலிருந்து இறக்கமதியாகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.

# சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இத்திருவிழா வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேசிய செய்திகள்

# இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180கோடி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

# நாட்டுப்புறத் துறையில் சாதனை படைத்த விஜயலெட்சுமிக்கு பத்ம விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

# தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமரிடம் அறிக்கை சமர்பிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

# பிறந்த தேதி இல்லாமல் 8 கோடிக்கும் அதிகமான பிஎஃப் கணக்குகளும், 11 கோடிக்கு அதிகமான கணக்குகளில் தந்தை பெயர் இல்லாமலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

# டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

# ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்ப் பெண்ணான இளவேனில் வலரிவன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

# 21வது காமன்வெல்த் போட்டிகள் நாளை ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் தொடங்க உள்ளன.

# இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

வர்த்தகச் செய்திகள்

# ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ஷிகா சர்மா மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# நாட்டில் உள்ள முக்கியத் துறைகளின் (நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம்) வளர்ச்சி 5.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

# மத்திய அரசுக்கு நேரடி வரியாக கடந்த நிதியாண்டில் ரூ.9.95 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

# நடப்பு நிதியாண்டில் மேலும் சில நிறுவனங்கள் வராக்கடன் பட்டியலில் சேரும் என இக்ரா தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

# இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக தேப்ஜானி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

# இலண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ராயல் ஹாலோவே எழுதிய கட்டுரையில் ஆப்ரிக்கா கண்டத்தில் பிளவு ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இறப்புச் செய்திகள்

# சமூக சேவகர் மற்றும் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியான வின்னி மண்டேலா காலமானார்.

Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top