Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

TNPSC Tamil Current Affairs 04-04-2018 | Get More Tamil & English Current Affairs

TNPSC Tamil Current Affairs 04-04-2018


உலக செய்திகள்

#  மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் பேர்ல் கத்தாரின் வரைபடத்தை சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடம் வெளியிட்டுள்ளது.

#  விண்வெளியில் தேங்கியுள்ள 7500டன் குப்பைகளை அகற்றும் செயற்கைக்கோளை இங்கிலாந்து விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

#  இந்தியா – ஜப்பான் – அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

#  இந்தோனேசியாவின் ஜகார்தா கடல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக (கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால்) அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#  கெமரோவோ (ரஷ்யா) பகுதி ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். (வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக)

தேசிய செய்திகள்

#  மாநிலங்களை முன்னவராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

#  2018ம் ஆண்டின் தேசிய அளவில் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

#  தேசிய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 4ம் இடம் பிடித்துள்ளது.

#  நாட்டிலேயே சிறந்த இன்ஜினியரிங் கல்லூரியாக சென்னை ஐஐடியும், பல்கலை பிரிவில் பெங்களுருவில் ஐஐஎஸ்சியும், நிர்வாக பாடப்பிரிவில் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகியவை தேசிய அளவிலான தரப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன.

#  பெங்களுரு மாநகரில் குப்பை, கழிவுகளை அகற்றுவதை கண்காணிக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

#  குஜராத் மாநில வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக அகமது
படேலை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

#  இந்திய பாட்மிண்டன் சங்கம் சங்கத் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

#  பிசிசிஐ ஜூனியர் அணி தேர்வுக் குழுவில் முன்னாள் வீரரான ஆசிஷ் கபூருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

#  ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் உள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

#  இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கு முதல் நாள் ஏலம் முடிந்துள்ளது.

#  தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சர்வதேச போட்டியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

#  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை வீசி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை படைத்துள்ளார்.

வர்த்தக செய்திகள்

#  சர்வதேச அளவில் செல்போன் தயாரிப்பில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#  2017-18 நிதியாண்டில் நேரடியாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

#  இந்திரபிரஸ்தா கியாஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 1.5 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.

#  2017-18ம் நிதியாண்டில் தேசிய அளவில் சுமார் 4 ஆயிரத்து 405 கிலோ மீட்டர் ரயில் பாதையை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Get More Tamil & English Current Affairs  >>


Related Post:

0 Comments
Back To Top