Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

TNPSC Tamil Current Affairs 05-04-2018 | Get More Tamil & English Current Affairs

TNPSC Tamil Current Affairs 05-04-2018


உலகச் செய்திகள்

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

#  உள்நாட்டுப் போர் நடந்து வருகிற ஏமன் நாட்டுக்கு 87 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

#  மெக்சிகோ எல்லையில் மக்களின் ஊடுருவலை தடுப்பதற்காக அப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

#  பாதுகாப்புத் துறை வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ள மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ரஷியா (மாஸ்கோ மாநாடு) சென்றுள்ளார்.

தேசியச் செய்திகள்

#  இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ரூ.4,312 கோடி இந்தியா கடன் அளித்திருப்பதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

#  இந்தியாவில் அலைபேசி செயலி வழி வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு பயணக் காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

#  காமன்வெல்த் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 17-ந் தேதி இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

வர்த்தகச் செய்திகள்

#  ரிசர்வ் வங்கி பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என உத்திரவிட்டுள்ளது.

#  இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதி ஆண்டிற்கான (2028-19) ரெப்போ விகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.

#  ஆன்லைன் பயண போர்டல் தளமான MakeMy Trip இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத்தளமான Flipkart உடன் இணைந்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

#  ஆஸ்திரேவியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த குருராஜா 56 கிலோ எடைப்பரிவில் வெள்ளிப்;பதக்கம் பெற்றுள்ளார். (இந்திய அணி வென்றுள்ள முதல் பதக்கம்)

#  ஆஸ்திரேவியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த மிராபாய் சானு 48 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

#  ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

#  சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

#  செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரோபோ தேனீக்களை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

#  ஏப்ரல் 5 – தேசிய கடல் தினம்
Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top