Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

TNPSC Tamil Current Affairs 06-04-2018 | Get More Tamil & English Current Affairs

TNPSC Tamil Current Affairs 06-04-2018


உலக செய்திகள்

விண்வெளியில் நொடிக்கு ஆயிரம் புகைப்படங்களை எடுக்கும் ஹைபர் கேமராவை இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் “விக் தில்லோன்” தலைமையிலான “ஷெப்பீல்ட் பல்கலைக்கழக குழு” கண்டுபிடித்துள்ளது.

#  பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் இருக்கும் இக்கார்ஸ் என்ற நீல நிற நட்சத்திரம் ஒன்றை “தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப்” என்ற தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

#  பஹ்ரைன் (வங்காள விரிகுடா) நாட்டில் எட்டு ஆயிரம் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சுரக்கும் புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் “முஹம்மது பின் கலிபா” தெரிவித்துள்ளார்.

தேசிய செய்திகள்

#  இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் காவல் துறை துணை ஆய்வாளராக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

#  கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#  அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஷாக்யா மேலும் சில அமைச்சர்களுடன் இன்று இந்தியா வந்துள்ளார்.

#  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினை வரும் 8ம் தேதி சந்திக்க இருக்கிறார்.

#  ஐந்து நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி ஏப்ரல் 16ம் தேதி முதல் சுவீடன் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் செய்கிறார். பின்பு ஸ்டாக்ஹோம் நகரில் நடக்க உள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

#  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

விளையாட்டு செய்திகள்

#  ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

#  ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

#  ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதலில் 69கி.கி. எடைப்பிரிவில் தீபக் லாதர் மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

#  இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ரூ.6,138.1 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

#  2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டத்தை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்துக்கு பதிலாக ஹென்ரிச் க்ளாசன் பங்கேற்க உள்ளார்.

#  2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியதை அடுத்து டாம் குர்ரான் விளையாட உள்ளார்.

வர்த்தக செய்திகள்

#  2018-19ம் ஆண்டிற்கான நிதிக் கொள்கையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

#  வளைவான செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படத்தக்க வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது.

#  நிதி சேவைத் துறையைச் சேர்ந்த ஐஎல்ரூஎஃப்எஸ் செக்யூரிட்டீஸ் சர்வீஸஸ் (ஐஎஸ்எஸ்எல்) நிறுவனத்தை தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் கையகப்படுத்துவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

#  நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

#  நேரடி மானியத் திட்டத்தால் ரூ.83 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய கொள்கைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

#  ஏப்ரல் 06 – முன்னாள் துணை பிரதமர் “பாபுஜெகஜீவன் பிறந்த நாள்”

இறப்பு செய்தி

#  மலையாள நடிகர் கொல்லம் அஜித் (56) உடல் நலக்குறைவால் நேற்று (05-06-2018) காலமானார்.
 Get More Tamil & English Current Affairs  >>

Related Post:

0 Comments
Back To Top