Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 01-05-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 01-05-2018

Tamil Current Affairs 01-05-2018 | Get More Tamil & English Current Affairs

உலக செய்திகள்

->  பிரிட்டன் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

->  இங்கிலாந்தில் ஆயிரம் அடி உயரமுள்ள பாறையின் பிளவில் ஏறி கரோலின் என்ற பெண் சாதனைப் படைத்துள்ளார்.

->  நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்து உள்ளது.

->  ரஷியாவிடம் இருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளது.

->  அமெரிக்காவை சேர்ந்த ப்ளு ஆர்ஜின் என்ற நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது.

->  அடுத்த நிதியாண்டில் பாகிஸ்தான் தனது சிவில் மற்றும் ராணுவத் தேவைகளுக்காக பாக்சாட்-எம்.எம்.1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

->  இலங்கையில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

->  ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

தேசிய செய்திகள்

->  அமெரிக்கா பிரடேட்டர் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

->  காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா (அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார். (துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங் பதவி விலகியதால்)

->  செர்பியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சரான இலிகா டேசிக் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

->  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் என்னும் அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

->  தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக சோ.அய்யர் (ஐ.ஏ.எஸ். ஆதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

->  கோயம்புத்தூரில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் ஸ்வைப்பிங் மெஷின்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விளையாட்டு செய்திகள்

->  சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியிலில் இந்தியாவின் பிரஸ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176வது இடத்தில் உள்ளார்.

->  அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முதன் முறையாக ஐதீன் ரைஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

->  இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை வீராங்கனை சிக்கி ரெட்டியின் பெயர் அர்ஜூனா விருதுக்கும் பயிற்சியாளர் சுதாகர் ரெட்டி பெயர் துரோணாச்சார்யர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

->  இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 40வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கௌரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

->  அஜர்பைஜான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

வர்த்தக செய்திகள்

->  ஜிஎஸ்டி நடைமுறையின் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளது.

->  நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் ஜிஎஸ்டியாக ரூ.1 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

->  கோட்டக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

->  ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் ரூ.3,961 கோடி லாபம் ஆகும்.

முக்கிய தினங்கள்

->  மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம்

இறப்பு செய்தி

->  அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் (83) நேற்று காலமானார்.

Related Post:

0 Comments
Back To Top