Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 02-05-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 02-05-2018 

Tamil Current Affairs 02-05-2018 | Get More Tamil & English Current Affairs

உலக செய்திகள்

->  கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு மே 9ம் தேதி நடைபெறவுள்ளது.

->  கேப்டவுன் நகரின் (தென் ஆப்பிரிக்கா) தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

->  இலங்கையில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. (இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது)

->  இலங்கையில் 4வது முறையாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் புதிதாக 18 கேபினட் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

->  வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தேசிய செய்திகள்

->  காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் லக்னோ (உத்திரப்பிரதேசம்) முதலிடம் பிடித்துள்ளது.

->  உலக சுகாதார நிறுவனத்தின் உலகின் காற்று மாசு மிக்க நகரங்கள் பட்டியில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

->  சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என தொலைத்தொடர்புத் செயலாளர் அருணா சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

->  தமிழகத்தில் ரூ.2467 கோடியில் கூடுதலாக ஒரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

->  விமானப் பயணத்தின்போது இணையதளம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பான திட்டத்துக்கு மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

->  சௌபாக்யா திட்டத்தின்கீழ் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்தும் வீடுகளுக்கும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்று ஆர்.ஆர்.சிங் (மத்திய மின்சாரத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடம் பெற்றுள்ளது.

->  சர்வதேச துப்பாக்கி சுடுதல் 10மீ. ஏர் பிஸ்டல் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஷஸார் ரிஸ்வி முதலிடம் பிடித்துள்ளார்.

->  ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 2 மற்றும் 3 வது இடத்தில் உள்ளது.

->  பத்மஸ்ரீ விருதுக்கு இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியின் பெயர் பரிந்துரைக்கப்ட்டுள்ளது.

->  இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹரேந்திர சிங் (மகளிர் அணி பயிற்சியாளர்), இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் (ஆடவர் அணி பயிற்சியாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

->  இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஸ் கோயத் ஆசிய அளவில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள்

->  கப்பல் சரக்கு போக்குவரத்து சேவையை புக் செய்து தொழில்துறையில் ஈடுபடுத்த இந்திய கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

->  பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை அதிகரிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இறப்பு செய்தி

->  மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரும், மேற்கு வங்க முன்னாள் நிதியமைச்சருமான அசோக் மித்ரா நேற்று (1-5-2018) காலமானார்.

Related Post:

0 Comments
Back To Top