Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 06-05-2018

Tamil Current Affairs 06-05-2018

Tamil Current Affairs 06-05-2018

உலக செய்திகள்

->  சீனாவை சேர்ந்த ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

->  செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘இன்சைட்’ என்னும் விண்கலத்தை அட்லஸ் ராக்கெட் மூலம் நாசா செலுத்தி உள்ளது.

->  சவுதி அரேபியாவில் கிறித்துவ தேவாலயங்களை கட்டுவதற்கு மன்னர் முகமது பின் சல்மான் அனுமதி அளித்துள்ளார்.

->  தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு, இன்று பூமியை சூரியப் புயல் தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

->  சீனா, கார்ல் மார்க்சின் இருநூறாண்டு நிறைவையொட்டி அவரது சிலையை (இரண்டாயிரத்து முந்நூறு கிலோ எடை, ஐந்தரை மீட்டர் உயரம்) ஜெர்மனிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

தேசிய செய்திகள்

->  இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெண்களே நிர்வகிக்கும் ‘பிங்க் வாக்கு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளது.

->  இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில் பெண்களுக்கு என்று தனியாக ஆட்டோ, டாக்சி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

->  சர்வ சிகபஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிகபஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிகபஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

->  அதிவேக ரயில்கள் செல்லும் பாதைகளில் இருபுறமும் சுவர் கட்டி அதில் விளம்பரம் செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  சீனாவில் நடைபெற்ற உலக நடைப் பந்தயத்தில் மகளிருக்கான 50 கிலோ மீட்டர் பிரிவில் சீனாவின் லியாங் ரூய் (4 மணி 4 நிமிடம் 36 நொடிகளில்) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

->  செக்குடியரசு ப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

->  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் ரூ.1.3 கோடி பரிசு வழங்கியுள்ளது.

வர்த்தக செய்திகள்

->  இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன் மார்ச் மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

->  பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.219 கோடி பெற்றுள்ளது.

->  அம்புஜா சிமெண்ட்ஸ் முதலாம் காலாண்டில் ரூ.514.34 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது.

Related Post:

0 Comments
Back To Top