Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 07-05-2018

Tamil Current Affairs 07-05-2018

Tamil Current Affairs 07-05-2018

உலக செய்திகள்

->  உலகளவில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.

->  வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் குறைந்த எடைக்கொண்ட செயற்கைக்கோள் (பெயர் – அனிதா சாட்) ஒன்றை வில்லட் ஓவியா (திருச்சி) உருவாக்கியுள்ளார்.

->  ஜப்பானின் ‘டோக்யு’ எனப்படும் காளைகள் மோதும் போட்டியின் மைதானத்திற்குள் முதன் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

->  அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் முழுவதும் ரோபோக்களால் இயக்கப்பட்டு வருகிறது.

தேசிய செய்திகள்

->  சுனாமி முன்னறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளதாக இன்காய்ஸ் (கடல்சார் தகவல் சேவை இந்திய தேசிய மையம்) நிறுவனத்தின் இயக்குநர் எஸ்எஸ்சி செனாய் தெரிவித்துள்ளார்.

->  நாட்டிலேயே பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளதாக சி.ஏ.ஆர்.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது.

->  திரிபுரா மாநிலத்தில் உள்ள டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் ஒளிபரப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  ஐரோப்பாவில் பள்ளி குழந்தைகளுக்கு நடைபெற்ற உலக அளவிலான செஸ் போட்டியின் 7 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவி லகபஷனா (காரைக்குடி) சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

->  அபுதாபி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ரமிட் பாண்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

->  மொராக்கோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம் வீராங்கனை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

->  தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா 20 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

->  இலங்கையில் நடைபெற்ற தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் நீளம் தாண்டுதலில் எஸ்.லோகேஷ் (இந்தியா) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

->  ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய பவர்லிப்டிங் தொடரில் மகளிருக்கான 84 கிலோ எடை பிரிவில் மாணவி ரம்யா (சென்னை) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

விருதுகள்

->  மஸ்ட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் இயக்குநர் பாக்யராஜூக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள்

->  டெரிவேட்டிவ் (பங்கு) வர்த்தகத்துக்கான நேரத்தை நீட்டிப்பதற்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

->  வீடுகளுக்கே சென்று டீசலை விற்பனை செய்யும் திட்டத்தை மும்மைபயில் ஹிந்துதஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் தொடங்கியுள்ளது.

->  டீமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் 2018ம் ஆண்டின் காலாண்டு லாபம் 167 கோடி ஆகும்.

Related Post:

0 Comments
Back To Top