Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 08-05-2018

Tamil Current Affairs 08-05-2018


உலக செய்திகள்

->  ரஷ்யாவின் புதிய அதிபராக ‘விளாடிமீர் புதின்’ 4வது முறையாக நேற்று(07.05.2018) பொறுப்பேற்றுக் கொண்டார்.

->  ரஷ்யாவின் புதிய துணை பிரதமராக ‘அன்ட்டன் சிலுவனாவ்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

->  ஜெருசலேம் நகரில் அமெரிக்கா கட்டியுள்ள புதிய தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு, ‘அமெரிக்க தூதரகம் சாலை’ என இஸ்ரேல் அரசு பெயர் சூட்டியுள்ளது.

->  ஆஸ்திரேலியாவில் பல்வேறு சலுகைகள் அடங்கி ‘மத்திய பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தேசிய செய்திகள்

->  உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் எதிர்த்து வாதாட மத்திய அரசு செலவு செய்யும் தொகை ரூ.42.40 கோடியாக உயர்ந்துள்ளது.

->  உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளில் வசிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


->  மின்சார திருட்டை தடுப்பதற்காக பிரீபெய்டு மீட்டர்கள் என்ற புதிய திட்டத்தினை உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

->  பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க 9 மாநிலங்களில் கூடுதல் உதவி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

->  உத்தரகாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் 700 கிராமங்களுக்கும் மேல் வறண்டுவிட்டன என்றும் மொத்தம் 3.83 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் கிராமங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து விட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

->  இரயில் பயணத்தின் போது வாங்கும் உணவுக்கு ரசீது வழங்க இரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

->  அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களிடம் அபராதம் வசூலிக்க, சுங்கச் சாவடிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

->  காரைக்காலில், காரைக்கால் அம்மையார் புராணத்தின் பின்னணியில், மாம்பழ திருவிழா நடைபெறுகிறது. உலகத்தில் மாங்கனி திருவிழா நடக்கும் ஒரே இடம் காரைக்காலாகும்.

->  முதன் முதலாக கவுதமாலா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் ‘வெங்கையா நாயுடு’, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டு அதிபர் ‘ஜிம்மி மொராலசை’ சந்தித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

->  இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான நான்கு நாடுகள்(சீனா, தைபே, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா) கால்பந்து போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு பதிலாக கென்யா அணி இடம் பெறும் ஏஐஎப்எப் தெரிவித்துள்ளது.

2018 ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ‘ராபின் உத்தப்பா’, ஐ.பி.எல் போட்டியில் 4000 ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

->  ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் கார்த்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ‘அம்பதி ராயுடு’ முதலிடத்தில் உள்ளார்.

->  சித்தூரில் நடைபெற்ற 32-வது பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், மகளிர் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

->  ரஷ்யாவில், ஜுன் 14ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதி வரை நடைபெறவுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காணுவதற்கு, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து 6 குழந்தைகளை அழைத்து செல்கிறது.

->  ஆர்சனல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ‘ஆர்சன் வெங்கர்’ 22 ஆண்டுகள் பணியாற்றி கடந்த ஞாயிற்றுகிழமை பணி நிறைவு செய்தார்.

வர்த்தக செய்திகள்

->  மத்திய அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம், 2022ம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

->  இந்தியாவின் உருக்குப் பொருட்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டில் 16.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

->  கார்ப்பரேட் கடன், சிறு மற்றும் நடுந்தர தொழில் கடன், வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற சேவைகளை அளித்துவரும் இண்டோஸ்டார் கேபிடல் பைனான்ஸ் நிறுவனம், மே 9ம் தேதி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

->  ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

->  ‘முகேஷ் அம்பானியின்’ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

->  பேட்டரி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.189.56 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

Related Post:

0 Comments
Back To Top