Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 10-05-2018

Tamil Current Affairs 10-05-2018

Tamil Current Affairs 10-05-2018

உலக செய்திகள்

->  இரண்டாம் உலக போரில் ஜெர்மனியை ரஷ்யா வென்றது. இதன் 73வது ஆண்டு நினைவு தினம் மே 9ம் தேதி ரஷ்யாவில் கொண்டாடப்பட்டது. இதில் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் 1200 ஆயுதங்களின் அணி வகுப்பு நடைபெற்றது.

->  உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை, உலகில் சக்திவாய்ந்த பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார்.

->  சீனா காற்று மாசுப்பாட்டை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அளிக்கும் செயற்கைக்கோளை(கோபஃன்-5) 4சி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

->  மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தேசிய செய்திகள்

->  இரயில் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

->  காணாமல் போன சிறார்களை கண்டுபிடிக்க ‘பேஸ் ரெகாக்னிசன்’ என்ற மென் பொருளை டெல்லி காவல்துறையினர் பயன்படுத்த உள்ளனர்.

->  குடியரசு தலைவராகப் பதவியேற்றப்பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதன் முறையாக இன்று சியான்சின்(காஷ்மீர்) செல்கிறார். இவர் சியாச்சின் செல்லும் இரண்டாவது ஜனாதிபதி ஆவார்.

->  உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை, உலகில் சக்திவாய்ந்த பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 9வது இடத்தில் உள்ளார்.

->  இந்திய வம்சாவழி மருத்துவர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழு முதன் முறையாக தண்டு வட எலும்பு அறுவை சிகிச்சையை(கார்டோமோ-குறுத்தெலும்பு கட்டி) ரோபோ மூலம் செய்து சாதனைப் படைத்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் நாமக்கல் மாவட்டம் அக்கியம் பட்டியை சேர்ந்த மாணவி கமலி, 350 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

->  ஐபிஎல் போட்டியில் மும்பை அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

->  2018ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அறிமுகமாகின்றன.

->  ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம்(ஃபிஃபா) ரூ.20.15 லட்சத்தை அபராதமாக (பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர்களை ரஷ்ய ரசிர்கள் இன ரீதியாக விமர்சித்த விவகாரம்) விதித்துள்ளது.

வர்த்தக செய்திகள்

->  2017-2018 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்குவதில் தமிழ்நாட்டு மக்கள் நாட்டிலேயே 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

->  வங்கிகளின் வாராக்கடன், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

->  இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்கி உள்ளது.

->  பான் அட்டை பெற விண்ணபிக்கும் மூன்றாம் பாலினத்தவர், பாலினத்துக்கான சான்று ஆவணம் இணைக்கத் தேவையில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Related Post:

0 Comments
Back To Top