Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 11-05-2018

Tamil Current Affairs 11-05-2018

Tamil Current Affairs 11-05-2018

உலக செய்திகள்

->  அமெரிக்காவில் கலிபோர்னியா நகரை, உலகின் முதல் சோலார் நகரமாக செயல்படுவத்துவதற்கு அனைத்து வீடுகளிலும் கட்டாயம் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

->  உலகிலேயே, ஒரே கல்லால் செய்யப்பட்ட உயரமான சிலை கர்நாடகா மாநிலம்(இந்தியா), சரவணபெலகோலா என்ற இடத்தில் உள்ள கோமதீஸ்வரர்(பாகுபலி என்று அழைக்கப்படுவார்) சிலையாகும்.

->  மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், சட்ட கல்லூரி மாணவர் பிரபாகரன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

->  மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகாதீர் முகமது, அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

தேசிய செய்திகள்

->  மகாராஷ்டிராவில் உள்ள அகமதாபாத் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ரேடியோ நிலையம் தொடங்கப்பட உள்ளது. இந்த ரேடியோ முழுமையாக கைதிகளால் இயக்கப்படும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

->  அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் செல்கிறார்.

->  நாடு முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

->  பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் 5 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்பட்டிருந்தால், அது பற்றி தகவல்களை அந்த பேக்கேஜில் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவு செய்துள்ளது.

->  குஜராத்தில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரே இடத்தில் 740 பேர் துடைப்பத்துடன் நடனமாடி சாதனைப் படைத்துள்ளனர்.

->  வை-பை இணைப்பு மூலம் விமானத்தில் இணைய சேவை வழங்க புதிய விதிகளை வரையறை செய்ய தொலைத்தொடர்பு துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

->  பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ் உதவி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

->  இத்தாலி கால்பந்து போட்டியில் 13வது முறையாக ஜுவென்டஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

->  இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாமுக்கு, மொத்தம் 30 வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் அறிவித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

->  மே 11 – தேசிய தொழில்நுட்ப தினம்.

->  மே 11 – இந்தியாவின் பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராப்பாய் பிறந்த நாள்.

வர்த்தக செய்திகள்

->  நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ ‘டிஜிட்டல் சாம்பியன்கள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

->  நிறுவனங்களின் இயக்குனர் குழுவில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை ஒருவரே வகிக்க கூடாது. அந்த பதவியை தனித் தனியாக பிரிக்க வேண்டும் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு
அமைப்பான செபி தெரிவித்துள்ளது.

->  உலக புகழ்வாய்ந்த தேடல் பொறியான கூகுளின், ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில், செய்திகள் மட்டும் அல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கான புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

->  இந்தியன் வங்கி, கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.131.98 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

Related Post:

0 Comments
Back To Top