Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 12-05-2018

Tamil Current Affairs 12-05-2018

Tamil Current Affairs 12-05-2018

உலக செய்திகள்

->  இலங்கையின் வடமாகாண அவை மே 18ம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக அறிவித்துள்ளது.

->  ஈரானுடன் வணிக தொடர்ப்பு வைத்துள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.

->  ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்கா காலவரையின்றி(கிலாயூ என்ற எரிமலை லாவா குழம்புகளை வெளியேற்றுவதால்) மூடப்பட்டுள்ளது.

->  சிங்கப்பூரில் கவிஞர் சத்ரியனின் ‘காந்தள் சூடி’ என்ற கவிதை நூல் அறிமுக விழா, தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய செய்திகள்

->  தேர்தல் பணியில் எதிர்பாராது உயிரிழப்பு ஏற்பட்டால், அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

->  டெல்லி உயர்நீதிமன்றம், 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் இட ஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத இயலாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

->  இந்தியாவை அணு வல்லரசாக உயர்த்திய பொக்ராக்-2 அணு ஆயுத சோதனை நடந்து, நேற்றுடன்(மே 11) 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

->  காஷ்மீரில் பெண் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

->  பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

->  அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையில் நேபாளத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  லெபனான் நாட்டில் நடைபெற்ற ஆசிய கேடட் ஜுடோ சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

->  டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மார்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று ஜான் மெக்கன்ரோவின் 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார்.

->  மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை காவல் துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

->  பாட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் மற்றும் யோனெக்ஸ் சன்ரைஸ் நிறுவனம் இடையே ரூ.75 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

->  ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற 43வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி வீரர்கள் புற்று நோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடினர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

புதிய நியமனம்

->  மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக ராமலிங்கம் சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

->  மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முகமது யாகூப்மிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

->  மே 12 – உலக செவிலியர் தினம்.

வர்த்தக செய்திகள்

->  இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

->  மத்திய அரசுக்கு சொந்தமான கனரா வங்கி நான்காம் காலாண்டில் ரூ.4,859.77 கோடி இழப்பைக் கண்டுள்ளது.

->  பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நான்காவது காலாண்டில் ரூ.2,583 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.

->  சிபிசிஎல் என்றழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சென்ற நிதி ஆண்டில் ரூ.44,188 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Related Post:

0 Comments
Back To Top