Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 13-05-2018

Tamil Current Affairs 13-05-2018

Tamil Current Affairs 13-05-2018

உலக செய்திகள்

->  ட்ரோன் எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் உணவை விநியோகம் செய்வதற்கு உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (உபேர் நிறுவனத்தின் புதிய ஆப் மூலம் தேவைப்படும் உணவு குறித்து ஆர்டரை அழுத்தினால், 30 நிமிடத்திற்குள் உணவுப் பொருள் வீட்டுக்கு வந்து விடும்)

->  சீன அரசு ஈரான் நாட்டுக்கு புதிய இரயில் சேவையை தொடங்கி உள்ளது.

தேசிய செய்திகள்

->  விமானங்களில் இருப்பதைப் போலவே ரயில்களிலும் அதிநவீன கருப்பு பெட்டிகள் (விபத்தை தடுக்கும் வகையிலும், ஆபத்துக்களை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையிலும்) உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

->  கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் ‘இ போஸ்’ (எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல்) என்னும் எந்திரத்தின் மூலம் ஏ.டி.எம் வசதி உட்பட 20 வங்கி சேவைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

->  மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை‘, சர்வதேச செவிலியர் தினமான நேற்று (மே 12) 35 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

->  2018ம் ஆண்டு முடிவுக்குள் 8 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

->  கர்நாடக தேர்தலில் முதன் முறையாக பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு செய்திகள்

->  தேசிய பயிற்சி முகாம்கள், பயிற்சி மையங்களில் மருந்து ஊசிகளை தடகள வீரர்கள் கொண்டு செல்ல இந்திய அமைச்சூர் தடகள சங்கம் (ஏஃஎப்ஐ) தடை விதித்துள்ளது.

->  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் முன்னேறியுள்ளார்.

->  ஐ.பி.எல் பெண்கள் டி20 போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

வர்த்தக செய்திகள்

->  ஜி.எஸ்.டி சம்பந்தமாக புதிய மொபைல் ஆப் (ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர்) ஒன்றை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தியுள்ளார்.

->  தேனா வங்கியை வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

->  மத்திய அரசு 3 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுமதியளித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Post:

0 Comments
Back To Top