Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 14-05-2018

Tamil Current Affairs 14-05-2018

Tamil Current Affairs 14-05-2018

உலக செய்திகள்

->  இத்தாலி நாட்டை சேர்ந்த ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு வெளிநாடுகளில் பணிவோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவது குறித்த ஆய்வை மேற்கொண்டது. இதில் இந்தியா முதலிடத்தல் உள்ளது.

->  சிங்கப்பூர் ஆட்சி மொழியாக, தமிழ் மொழி அதிகாரப்பூர்வமாக தொடரும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

->  வடகொரிய அரசு, அணு ஆயுத பரிசோதனை மையத்தையும், ரகசிய சுரங்கங்களையும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு சாவடிகளை முற்றிலுமாக அகற்றப் போவதாக அறிவித்துள்ளது.

->  சீனா, முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரித்த விமானம் தாங்கி போர்க்கப்பல் டாலியன் கப்பல் கட்டும் தளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டது.

தேசிய செய்திகள்

->  இந்திய இராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு சார்பில் ராஜஸ்தானில் ‘விஜய் பிரஹார்’ என்ற போர் பயிற்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க இராணுவத்தை பின்பற்றி ‘ஏர் கேவல்ரி’ போர் என்ற பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

->  உத்திரப் பிரதேசத்தில், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கும், பணியிடமாற்றம் செய்வதற்கும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

->  இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 365 நாட்களுக்கு அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே டிக்கெட் பதிவு செய்ய அனுமதிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

->  பர்களை அடையாளம் காண நாடு முழுவதும் டிஎன்ஏ தகவல் வங்கிகள் அமைப்பதற்கான வரைவு மசோதா இறுதி செய்யப்பட்டு வருவதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

->  இந்திய இராணுவம், ரூ.15 கோடி செலவில், முக்கிய ஆயுதங்களில் பயன்படுத்துவதற்கான வெடிபொருள்களை, உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.

->  அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியால் குஜராத் சபர்மதி சிறையில் பெண் கைதிகளுக்கு, சானட்டரி நேப்கின் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுதலைப் பெற்று சிறைச்சாலையை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு பெண் கைதியும் கைத்தொழிலை கற்று செல்கின்றனர்.

விளையாட்டு செய்திகள்

->  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

->  2018 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

->  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக், நாட்டின் பெட்ரா விட்டோவா 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

->  சிபிஎஸ்இ அமைப்பு, இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடிய ஆறு வீரர்களுக்கு முதன் முறையாக தனியாக தேர்வுகளை நடத்தியது.

->  2018 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் தொடர்ச்சியாக அரை சதம் அடித்தார். இதன் மூலம் விரேந்தர் சேவாக்கின் சாதனையை சமன் செய்தார்.

->  பார்முலா 1 கார் பந்தயத்தின் 5வது சுற்றில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன்(மெர்சிடஸ் அணி) முதல் இடம் பிடித்துள்ளார்.

புதிய நியமனம்

->  பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியாக கிருஷ்ணா முராரி நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

->  மே 14 – சமூக வலைத்தளமான பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஜூக்கர்பெர்க் பிறந்த நாள்.

வர்த்தக செய்திகள்

->  வங்கிகளின் வாராக்கடன் ஒதுக்கீட்டு சுமைகளைக் குறைக்கும் வகையில் ஒதுக்கீடு சான்றிதழ்களை(பிஎஸ்சி) வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

->  மின்சார கார் மற்றும் இரு சக்கர வாகனம் வாங்குவோருக்குச் சலுகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

->  பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் கடந்த ஏப்ரலில் ரூ.12,400 கோடி முதலீடு வந்துள்ளது.

->  இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ்-ல் போர்டு உறுப்பினர்களின் தலைவர் பதவியில் இருந்த ரவி வெங்கடேஷன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Related Post:

0 Comments
Back To Top