Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 15-05-2018

Tamil Current Affairs 15-05-2018

Tamil Current Affairs 15-05-2018

உலக செய்திகள்

->  பாகிஸ்தானில் பிறவியிலேயே பார்வை குறைப்பாடு உடைய ‘யூசப் சலீம்’ என்றவர், சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் பார்வை குறைபாடு உடைய ஒருவர் நீதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.

->  வடகொரியாவில், இதுவரை நடத்தப்பட்டுள்ள அணு ஆயுத சோதனையால் மேன்டேப் என்ற மலை 11.5 அடி நகர்ந்தும், 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

->  இஸ்ரேலில், டெல் அவிவிலிருந்த அமெரிக்க தூதரகம் ஜெருசலேம் நகருக்கு மாற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

->  ரோஹிங்கயா அகதிகளுக்கு உதவுவதற்காக வங்கதேசத்திற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

->  அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க விலகினாலும் ஈரான் தொடர்ந்து நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தேசிய செய்திகள்

->  கர்நாடக மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக 5 வருட ஆட்சியை பூர்த்தி செய்யும் முதலமைச்சர் என்ற பெருமையை சித்தராமையா பெற்றுள்ளார்.

->  வறட்சி, வெள்ளம் உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,161 கோடியை அளிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

->  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் 5.5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை (பசுமை திறன் மேம்பாட்டு திட்டம்(ஜிஎஸ்டிபி)) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

->  குஜராத்தில் ஆண்டு சொத்து கணக்கு தாக்கல் செய்யாத 1000 அதிகாரிகளின் சம்பளத்தை அம்மாநில அரசு பிடித்தம் செய்துள்ளது.

->  இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மே 21ம் தேதி ரஷ்யா செல்லவுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார். நிவேதா வெண்கலம் வென்றார்.

->  ஆசிய கேடட் மற்றும் ஜுனியர் ஜுடோ சாம்பியன் போட்டியில் 3 தங்கம் உள்பட 9 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

->  உலக டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதலிடம் பிடித்துள்ளார்.

->  2018 ஐபிஎல் போட்டியில் 47வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ரஹானே பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

->  தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னைப் பல்கலைக்கழகமும், பெண்கள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகமும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

புதிய நியமனம்

->  இரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல்க்குக் கூடுதலாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சக பொருப்பு அளிக்கப்பட்டுள்ளது.

->  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக எஸ்.எஸ் அலுவாலியா(மாநிலங்களவை குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள்

->  நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.

->  இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் சுமை இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

->  ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, இந்தாண்டு இறுதி முதல், உயர்த்தக் கூடும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

->  மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏர் இந்தியாவின் வருவாய் 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post:

0 Comments
Back To Top