Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 16-05-2018

Tamil Current Affairs 16-05-2018

Tamil Current Affairs 16-05-2018

உலக செய்திகள்

->  போர்ப்ஸ் பத்திரிக்கை உலக கோடீஸ்வரர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் இந்தியாவை சேர்ந்த வியாபாரிகள் 100 பேர் அரேபியாவில் கோடீஸ்வரர்களாக உள்ளது தெரிய வந்துள்ளது.

->  மலேசியாவில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹாதீர் முகமது, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவியில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

->  கொரிய தீபகற்பத்தின் ஒற்றுமை, அமைதி மற்றும் வளத்திற்கான பனமுன்ஜோம் பிரகடனம் குறித்து ஆலோசிக்க வடகொரிய மற்றும் தென்கொரிய நாடுகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

தேசிய செய்திகள்

->  லோக் உறுப்பினர்களை தேர்வு செய்யும், தேர்வுக் குழுவில்   மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

->  மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

->  சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்தியரான சஷாங்க் மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

->  2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சீருடை வழங்குவதற்காக, லி நிங் என்ற விளையாட்டு சீருடை நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐஓஏ) ஒப்பந்தம் செய்துள்ளது.

->  தென் கெரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோதுகின்றன.

->  சீனாவை சேர்ந்த 70 வயதான முதியவர்(இரண்டு கால்கள் இழந்தவர்) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.

முக்கிய தினங்கள்

->  மே 16 – 1975ம் ஆண்டு சிக்கிம் மாநிலம் இந்தியாவின் 22வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.

வர்த்தக செய்திகள்

->  பேட்டரி மற்றும் ஹைபிரிட் உள்ளிட்ட சூழல் பாதுகாப்பு வாகனங்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.9,400 கோடியை ஒதுக்குதற்கான வரைவு திட்டத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

->  ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின்(ஹெச்யுஎல்) லாபம் 14.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,351 கோடியாக இருக்கிறது.

->  பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.13,416 கோடியாக இருக்கிறது.

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

->  இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத், இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின் முதன் முதலாக நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றார். அங்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

Related Post:

0 Comments
Back To Top