Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 19-05-2018

Tamil Current Affairs 19-05-2018

Tamil Current Affairs 19-05-2018

உலக செய்திகள்

->  பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் விதத்தில் மே 11ம் தேதி ‘உழைப்பாளர் திருவிழா -2018’ நடைபெற்றது.

->  சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு தேவையான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்க ஆதரவுடன் துபாயில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிர்மல், 89.4 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனைப் படைத்தார். இவரது சாதனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

->  அமெரிக்காவின் அலபாமா பள்ளி பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பதிலாக புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ பட்டம் பெற்றது.

தேசிய செய்திகள்

->  ஆதார் அட்டை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான அடையாள அட்டை(யுடிஐடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

->  நாட்டில் இயற்கை பேரிடர்களால் ஆண்டுதோறும் சராசரியாக 2,200 உயிரிழப்புகளும் ரூ.60,000 கோடி மதிப்பில் பொருள் சேதமும் ஏற்படுவதாக மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கௌபா தெரிவித்துள்ளார்.

->  ஒடிஸா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வெற்றிகரமான நடவடிக்கைகளில் பணியாற்றிய காவலர்களுக்கு தலா ரூ.140 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

->  சர்வதேச அருட்காட்சியக நாளையொட்டி, புதுச்சேரி அருங்காட்சியகத்தில், 16ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை ஓவியங்கள் இடம் பெற்றுள்ள ஓவிய அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

->  மத்திய அரசு சமர்பித்த, வரைவு செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, 10 உறுப்பினர் அடங்கிய, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கட வேண்டும். தென்மேற்கு பருவ மழை துவங்கும் முன், அந்த ஆணையம் செயல்படும் வகையில், ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  2018 ஐபிஎல் போட்டியில், 52வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதினர். இதில் சென்னை அணி கேப்டன் டோனி எடுத்த ரன்களாள், ஐபிஎல் போட்டியில் அவர் பெற்ற மொத்த ரன்கள் 6000ஐ கடந்தது. இதன் மூலம் டி20 போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 5வது இந்தியர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

->  11வது ஐபிஎல் போட்டி வர்ணனையாளராக நிர்ணயிக்க, இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவை ஐபிஎல் நிர்வாகம் அனுகியுள்ளது.

->  பெண்கள் ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் டிரெயில் பிளேயர்ஸ், ஐபிஎல் சூப்பர் நோவாஸ் என இரு அணிகள் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

->  ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஹைதராபாத் அணி வீரார்கள் பசில் தம்பி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

->  திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஐவர் பூப்பந்துப் போட்டிகளில் தெற்கு, மேற்கு இரயில்வே அணிகளும், சென்னை ஐ.சி.எப். அணியும் வெற்றி பெற்றது.

முக்கிய தினங்கள்

->  மே 19 – 1904ம் ஆண்டு இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஸி டாடா இறந்த தினம்.

வர்த்தக செய்திகள்

->  கூகுள் நிறுவனம் இதர நிறுவனங்களின் இணையத் தேடுதலை தடுப்பதாக சாடியிருந்ததால் அந்நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

->  பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

->  நடப்பு மாதம்(மே) நாட்டின் சில்லறை பணவீக்கம்; 4.7 சதவீதமாக அதிகரிக்கும் என டன் அண்டு பிராட்ஸ்ட்ரீப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

->  அனைத்து வகை நுழைவு தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் 18 சதவீதம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என வரி ஆலோசனை ஆணையம் தெரிவித்துள்ளது.

->  லண்டன் மேயர் சாதிக்கான்-யின் IE 20 திட்டத்தின் கீழ் லண்டனில் வர்த்தகம் துவங்க 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

->  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2017-2018 மற்றும் 2018-2019 நிதியாண்டுகளில் 7.5 மற்றும் 7.6 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் உலகப் பொருளாதார அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

->  ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1,000 கோடியை முதலீடு செய்துள்ளது.

Related Post:

0 Comments
Back To Top