Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 20-05-2018

Tamil Current Affairs 20-05-2018

Tamil Current Affairs 20-05-2018

உலக செய்திகள்

->  அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரை கைவிட இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்துள்ளார்.

->  மலேசியா அரசு ஜூன் 1ம் தேதி முதல் சேவை மற்றும் சரக்கு வரியை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

->  இந்தியா – அமெரிக்கா இடையே அதிநவீன ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, கொள்முதல் போன்றவற்றுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

->  ரஷ்யாவில் முர்மான்ஸ்க் நகரில் நடந்த விழாவில், உலகின் முதலாவது மிதவை அணுசக்தி நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்

->  2028ம் ஆண்டிற்குள் உலகளவில் அதிக மக்கள் தொகை உடைய நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடிக்கும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

->  இந்தியாவின் வெளிநாட்டுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை அதிகாரியும் ஆன வி கே சிங் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

->  பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன வளாகங்களில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

->  இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக ராஜிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

->  தாய்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் தமிழக வீரர் வெங்கடாஜலபதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

->  ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக லால்சந்த் ராஜபுத் (முன்னாள் இந்திய வீரர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள்

->  தமிழகத்தில் ‘இ-நாம்’ எனும் ஆன்லைன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை சந்தை மையத்தை கூடுதலாக ஏழு இடங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

->  சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான டால்மியா பாரத் நான்காவது காலாண்டு நிகர லாபம் ரூ.183.65 கோடி ஆகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

->  மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

புதிய நியமனம்

->  கர்நாடக மாநலத்தின் புதிய முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்க உள்ளார்.

விருதுகள்

->  இந்திய – ஐரோப்பிய கலாச்சாரங்கள் மேம்படும் வகையில் பணியாற்றி, பாலமாக விளங்கியதற்காக அமிதாப் பச்சனுக்கு (இந்தியா) ஐரோப்பிய யூனியன் சிறப்பு விருது வழங்கியுள்ளது.

நூல் வெளியீடு

->  குவைத்தில் நடைபெற்ற ‘இந்தியன் பிரன்ட் லைனர்ஸ்’ சேவை அமைப்பின் 21ம் ஆண்டு விழாவில் ‘என்.சி.மோகன்தாசின்’ ‘உலக அளவில் சாதித்த இந்திய மருத்துவர்கள்’ என்ற நூலை குவைத்துக்கான இந்திய தூதர் ‘ஜீவசாகர்’ வெளியிட்டுள்ளார்.

Related Post:

0 Comments
Back To Top