Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 30-04-2018 | Get More Tamil & English Current Affairs

Tamil Current Affairs 30-04-2018 

Tamil Current Affairs 30-04-2018 | Get More Tamil & English Current Affairs

உலக செய்திகள்

->  குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ளும் விதமாக வண்ணமய ரோந்து வாகனங்களை துபாய் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

->  சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா வரும் செப்டம்பர் மாதத்தில் ராணுவ பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

->  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான மைக் பாம்பியோ முதல் முறையாக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

->  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

->  பிரிட்டனின் உள்துறை அமைச்சரான ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். (குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததற்காக)

தேசிய செய்திகள்

->  நாட்டிலேயே முதன்முறையாக ஹைதராபத் காவல் நிலையம் முற்றிலுமாக கணினி மயமாயக்கப்படவுள்ளது.

->  நாடு முழுவதும் மே மாதத்தில் 650 அஞ்சலக பேமண்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்படும் என மனோஜ் சின்ஹா(மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

->  மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) புதிய தலைவராக ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

->  நமது இந்தியா சொந்தமாக GPS புதிய செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது.

->  ஹாக்கி பயிற்சி முகாமிற்கு, புதுச்சேரி ஹாக்கி அணி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

->  இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேயின் 148வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

->  பிரேசில் கால்பந்து தலைவர் பதவியில் இருந்து மார்கோ போலோ டெல் நீரோவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

vஜெர்மனியில் நடைபெற்ற போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியின் பட்டம் வென்றார்.

->  ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

->  சீனாவில் நடைபெற்ற குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் கன்னேஸ்வன் சாம்பியன் பட்டம் வென்றார்.

->  தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

->  செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது போட்டியில், இந்திய அணி வென்றது.

->  பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

வர்த்தக செய்திகள்

->  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), ரூ.4,221 கோடி முதலீட்டில் பெட்ரோகெமிக்கல் ஆலையை அமைக்கும் திட்டத்துக்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

->  ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.144.60 கோடி ஆகும்.
 Get More Tamil & English Current Affairs >>

Related Post:

0 Comments
Back To Top