Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 01-06-2018

Tamil Current Affairs 01-06-2018

Tamil Current Affairs 01-06-2018

உலக செய்திகள்

➡️ டென்மார்க்கில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.நில அதிர்வுகளைக் கண்காணித்து அளவிடும் 10 ‘சைஸ்மோ மீட்டர்’களை இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது.

➡️ சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பதிவிட்ட மனித உரிமை ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

➡️ பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ட்ரன்’ அண்மையில் 40 நாடுகளில் குழந்தைகளின் நிலைமையை பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இதில் வறுமை, பாலினப் பாகுபாடு, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் சுமார் 120 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

➡️ சீனாவில் ஆளில்லா விமானம் மூலம் பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் கொண்டு சேர்க்கும் நவீன தொழில்நுட்ப சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்

➡️ ஆன்லைனில இரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சில புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டைப் பயன்படுத்தி, இரயில் புறப்படுவற்கு முன்பே வேறு அல்லது விசேஷ இரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

➡️ இராணுவத்தில், இலக்கை நோக்கி தாக்கக் பயன்படுத்தப்படும் பினாகா ராக்கெட் 2வது நாளாக சோதனை செய்யப்பட்டது.

➡️ ஆந்திராவில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

➡️ திருமலையில் உள்ள எஸ்.வி அருங்காட்சியகத்தில் ஏழுமலையான் வைபவங்களை விளக்கும் வகையில் லேசர் காட்சிகளை ஏற்படுத்த தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் முடிவு செய்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

➡️ பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், ஜுன் 14ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் ‘ஸாபிவாகா’ ஓநாயாகும்.உலக கோப்பை கால்பந்து போட்டியில் 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசிய அரசு ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

➡️ 2009ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். லில் நடந்த முறைகேடு தொடர்பாக பி.சி.சி.ஐ சீனிவாசன் மற்றும் லலித் மோடி உள்ளிட்டோருக்கு ரூ.121 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

➡️ பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

➡️ பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார்.

முக்கிய தினங்கள்

➡️ மே 31 – சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

வர்த்தக செய்திகள்

➡️ மே மாதம் ஜிஎஸ்டி வரி மொத்த வருவாய் ரூ.94,016 கோடி என மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

➡️ 2018ம் ஆண்டிற்கான மிகவும் மதிப்பு மிக்கப் பிராண்டு கார்களின் பட்டியலில் முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.

➡️ நிதியாண்டிற்காண நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக உள்ளது. 2017-2018ம் ஆண்டின் 4வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என புள்ளியல் துறை அறிவித்துள்ளது.

➡️ பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.5,915.12 கோடியாக அதிகரித்துள்ளது.

➡️ மலேசியாவில் அமலில் உள்ள ஜி.எஸ்.டியை பிரதமர் மகாதிர் ரத்து செய்துள்ளார். இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

வடகொரியா, ஜெனரல் கிம் யோங் சோல், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்யோவை நியூயார்க்கில் சந்தித்து பேசினார்.

Related Post:

0 Comments
Back To Top