Submt Email to get Latest Job Updates...
After Sumit Email ID, Check your Email inbox (Verification Link)

Tamil Current Affairs 02-06-2018

Tamil Current Affairs 02-06-2018


உலக செய்திகள்

 கனடா அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு சுமார் ரூ.85 கோடி அளவுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது. இது ஜுலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

 ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனித கலாச்சார பேரவையின் சார்பில் நோம்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அரங்கத்திற்கு, காஷ்மீரில் இறந்த ஆஃசிபா பெயரையும், அந்த அரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஸ்னோலின் பெயரையும் சூட்டியுள்ளனர்.

 சிங்கப்பூரில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

 அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி நடை பெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்தி நெம்மானி(14) முதல் பரிசு வென்றார். 11 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினரே தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிய வருகிறது.

தேசிய செய்திகள்

 பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 டெல்லி மாநில அரசு, சாதி, பிறப்பு, இறப்பு, பென்சன் மற்றும் வருவாய், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வருவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

 நகர்ப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கென 1.50 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 ஒடிஸா மாநிலத்தில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

 இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டனாக ராணி ராம்பால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்னி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 ஃபிபா, 2018ம் ஆண்டிற்கான ஃபிபா உலக கால்பந்து போட்டியில் 45 வயதான எஸ்ஸாம் எல் ஹாட்ரியும், 19 வயதான கைலன் பாப்பேவும் மோத உள்ளனர்.

 புதிய நியமனம்

 பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்றுள்ளார்.

 சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை(குமாரி பி.டி ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன்) நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முக்கிய தினங்கள்

 ஜுன் 02 – வடகொரியாவில் குழந்தைகள தினம், 1999ம் ஆண்டு பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட தினம்.

வர்த்தக செய்திகள்

 சமூக வலைதளங்களின் பயன்பாட்டிற்கு வரும் ஜுலை 1ம் தேதி முதல் வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது.

 பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியாவும், சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.

 வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்களுக்கு இன்று முதல் இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-வே பில் செலுத்தவில்லை என்றால் 100 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post:

0 Comments
Back To Top