கடந்த மாதம் இந்தியாவில் மட்டும் 26.85 லட்சம் இந்திய வாட்ஸ் அப் பயனாளர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா வின் பகுதியாக இயங்கி வரும் வாட்ஸப் நிறுவனம், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 26.85 லட்சம் இந்திய வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதித்து உள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப விதி 2021 கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன்படி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா whatsapp கணக்கானது +91 என தொடங்கக்கூடிய தொலைபேசி எண் கொண்டு துவங்கப்பட்ட வாட்ஸப் கணக்குகள் அடையாளம் காணப்படுகிறது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகளில் 8.72 லட்சம் கணக்குகள் பயனாளர்களிடமிருந்து எந்த ஒரு புகார் வருவதற்கு முன்பே தடை செய்து விட்டோம் என்பதாகவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்டுள்ள வாட்ஸ் அப் கணக்குகளின் விகிதம் சென்ற மாதத்தை விட 15 சதவீதம் அதிகம் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23.28 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது
ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்ற பின்னர் அதனை கண்டறிந்து நீக்குவதற்கு பதிலாக எந்த வித தீங்கு நடப்பதற்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது வாட்ஸ் அப் பற்றிய நல்ல ஒரு எண்ணத்தை பயனாளர்களுக்கும் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.