சொந்த மகனை கூலிபடை வைத்து தீர்த்துக் கட்டிய பெற்றோர் – காவல்துறை கைது

Image : Indiatoday

அது மற்றும் போதைக்கு அடிமையான தன்னுடைய சொந்த மகனையே கூலிப்படை வைத்து தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானாவில் கம்பம் மாவட்டத்தில் சூரியப் பேட்டை பகுதியில் வாலிபரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன

இந்த சம்பவம் குறித்து ஹு சூர் நகர் காவல் அதிகாரி ராமலிங்க ரெட்டி கூறும்போது. சத்திரிய ராம் சிங் மற்றும் ராணி பாய் தம்பதியினர்களின் மகன் சாய்ராம் ( வயது 26) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சாய்ராம் என்பவர் மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார் மற்றும் பெற்றோரை தொடர்ந்து துன்புறுத்தியும் வந்துள்ளார் இதனால் மிகவும் விரக்தி அடைந்த பெற்றோர்கள் அவனை கொலை செய்ய வேண்டும் என்பதாக முடிவு செய்துள்ளனர், இதற்காக ராணி பையன் சகோதரர் சத்திய நாராயணாவை தொடர்பு கொண்டு உதவிக்காக நாடியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து ரவி ,தர்மா ,நாகராஜு, சாய் மற்றும் ராம்பாபு ஆகியோர் கொன்ற கூலிப்படையை அவர் தயார் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு முன்னதாகவே ரூபாய் 1.5 லட்சம் முன்பனமாக கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சம்பவம் நடந்த பின்னால் மூன்று நாட்களில் மீத தொகையான ரூபாய் 6.5 லட்சத்தை தரப்படும் என்பதாக அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்பு சத்திய நாராயணா மற்றும் ரவி இருவரும் அவருடைய காரில் கள்ளிபள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு கோயிலுக்கு சாய்ராம் அழைத்துச் சென்றுள்ளார்கள் வழியில் இன்னொரு குற்றவாளியும் காரில் ஏறி உள்ளார்.

பின்பு இவர்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார்கள். பிறகு சாய்ராம் மது போதையில் இருக்கும்போது அவரது கழுத்துப் பகுதியில் கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வாலிபரின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர் இது தவிர குற்றவாளிகளில் நான்கு பேரை கைது செய்துள்ளார்கள் மேலும் தப்பியோடிய நபரை போலீசார் வலை விரித்து தேடி வருகின்றனர் தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.