இந்தியா அரசு வெளியிட்ட ‘டிஜிட்டல் கரன்சி’ – ரிசர்வ் வங்கி

இந்தியா அரசு வெளியிட்ட ‘டிஜிட்டல் கரன்சி’ – ரிசர்வ் வங்கி

இந்திய தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றமாக டிஜிட்டல் கரன்சி இருக்கும் – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

டிஜிட்டல் கரன்சி என்பது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் மிகப்பெரிய சாதனையாக இருக்கப் போகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். டிஜிட்டல் கரன்சி என்பது “டிஜிட்டல் கோட்” பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது இந்த டிஜிட்டல் கரன்சியானது காகிதப் பணத்திற்கு நிகரான மதிப்பு உடையதாக விளங்கும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்து உள்ளன.

இந்தியாவில் முதன்முறையாக ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை நேற்று (செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது) சோதனை அடிப்படையில் இந்த டிஜிட்டல் கரன்சியானது வெளியிடப்பட்டுள்ளது இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயர் இடப்பட்டுள்ளது. தற்போது அரசு பங்கு பத்திரங்கள் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாக ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் கரன்சி குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வருடம் தின மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தாஸ் உரையாற்றினார் அப்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்:-

ரிசர்வ் வங்கி தற்போது டிஜிட்டல் கரன்சி என்ற பெயரில் பரிசோதனை முறையில் நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளது இது நமது நாட்டின் நாணயம் தொடர்பான வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.

எனவே இது இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் இந்த டிஜிட்டல் கரன்சியானது மிகப்பெரிய சாதனையாக இருக்கப் போகின்றது மேலும் தொழில் துறை மற்றும் டிஜிட்டல் துறையில் டிஜிட்டல் கரன்சியானது மிகப்பெரிய மாற்றமாக அமையும்.

பரிசோதனை முறையிலான சில்லறை சில்லரை வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சி இந்த மாதத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தும். அதற்கான தேதியும் தனியாக அறிவிக்கப்படும். டிஜிட்டல் கரன்சியை முழு அளவில் பயன்பாட்டிற்கு விடுவது எப்போது என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை ஏனென்றால் இதில் இறுதிக் கெடு எதுவும் தற்போது நிர்ணயிக்க நான் விரும்பவில்லை என்பதாக அவர் தெரிவித்துள்ளார்.