KGF 2 பட நடிகர் யாஷ் சொத்து மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா ? ராக்கி பாய் மாஸ்

கன்னட நடிகர் யாஷ இப்போது தென்னிந்தியாவிலும் மக்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்து விட்டார், அதற்குக் காரணம் KGF2 திரைப்படம் தான். இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்திய KGF 2 திரைப்படம், தற்போது தமிழ்நாட்டிலும் இன்னும் சில தினங்களில் 100 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கின்றார்கள்

இந்த வசூல் சாதனை தமிழகத்தின் முன்னணி திரைப்பட நடிகர்களான அஜித் விஜய் படங்களின் சாதனைக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது

நடிகர் யாஷ் சொத்து மதிப்பு

கேஜிஎப் 2 படத்திற்காக ரூபாய் 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக வட்டாரங்களில் தெரிவிக்கும் நிலையில் இப்படம் முழுவதும் மாஸ் காட்டும் யாஷ் அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 35 கோடி வரை வரும் என கணிக்கப்படுகிறது

என்னதான் சொத்து மதிப்பு , சம்பளம் என்று பேசினாலும் இல்லாதவர்களுக்கு உதவுவது, வரி கட்டுவது இதுபோன்ற அவர்களின் நல்ல விஷயங்கள் இவரை தனித்துவமாக காட்டுவது மட்டுமல்லாமல் இவர் மற்றவர்களுக்கும் உதாரணமாகவும் இருந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.