அதிகாரப்பூர்வ அறிவிப்பு – குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. வந்தாச்சு.. முதல்வர் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகை ரூ. 1000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Untitled1அதிகாரப்பூர்வ அறிவிப்பு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. வந்தாச்சு.. முதல்வர் போட்ட உத்தரவு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. வந்தாச்சு.. முதல்வர் போட்ட உத்தரவு!
ரொக்கப்பணம்:

தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை முன்னிட்டு தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூபாய்.1000 ரொக்க பணம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் பச்சரிசியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தொகையை மக்கள் பெறுவதற்கான டோக்கன், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜன.2ம் தேதி பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் பணி தொடங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ரூ. 1000 வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்டபடி 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு புதுவையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று தெரிவித்துள்ளார்.