தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் – முழு விபரம்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் – தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் முழு விபரம்
கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் 2023 ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக காவல்துறை சார்பாகவும், அரசு சார்பாகவும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் கலைக்கட்டும்.

இதனையடுத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகளுடன் இன்று சென்னை காவல்துறை ஆலோசனை நடத்தியது. அப்போது சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை கட்டுப்பாடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏதும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் சாலைகளில் போக்குவரத்து துறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களில் வாகனங்களில் காவல்துறை சார்பாக QR -Code ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.