100% Free Job Alert for you
Skip to content
Home » News » News » 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை அறிவிப்பு

8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை அறிவிப்பு

  • News

National Merit cum Means Scholarship : விண்ணப்பங்களை வரும் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதிவரை தேர்வுகள் இயக்ககம் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 8ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்குப் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத் தேர்விற்கு NMMS விண்ணப்பிக்கலாமென அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இத் திட்டத்தின் மூலம் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை http://dge1.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 50 ரூபாய் தேர்வு கட்டணத்துடன் பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களை http://dge1.tn.gov.in அறியலாம் எனவும் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தேர்வுப் பயிற்சிபற்றிய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobvision.in இணையதளத்தை பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *